Paristamil Navigation Paristamil advert login

விண்வெளிப் பயணத்தால் மரபணு மாறுபாடு ஏற்பட வாய்ப்பு!

விண்வெளிப் பயணத்தால் மரபணு மாறுபாடு ஏற்பட வாய்ப்பு!

28 தை 2017 சனி 14:59 | பார்வைகள் : 9577


 விண்வெளிப் பயணங்களால் மனிதர்களின் மரபணு அளவில் மாறுபாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

 
விண்வெளியில் ஒருவருடத்துக்கு மேல் செலவிட்ட அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி மற்றும் அவருடன் பிறந்த இரட்டையரான மார்க் கெல்லி ஆகியோரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் நாசா இவ்வாறு தெரிவித்துள்ளது. 
 
இதுகுறித்து பேசிய நியூயார்க்கின் வீல் கார்னர் பல்கலைக்கழக மரபணு ஆய்வுத்துறை தலைவர் கிறிஸ்டோபர் மேசன், விண்வெளிப் பயணத்தால் ஸ்காட் மற்றும் அவரது சகோதரர் இடையிலான குரோசோம் அளவு மாறுபடுவது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 
 
அதேபோல டிஎன்ஏ செயல்பாட்டிலும் மாறுபட்டு காணப்படுவதாகவும் அவர் கூறினார். இதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று மேரிலேண்ட்டில் உள்ள ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ பீன்பெர்க் கூறியுள்ளார். 
 
ஸ்காட் கெல்லி, கடந்த 2015-16ம் ஆண்டுகளில் சுமர் 340 நாட்களை விண்வெளியில் கழித்தார். இது பூமியில் அவரது வாழ்நாளில் 520 நாட்களுக்கு சமமானது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்