Paristamil Navigation Paristamil advert login

15 மாதம் கழித்து பூமிக்கு வந்த தகவல்

15 மாதம் கழித்து பூமிக்கு வந்த தகவல்

1 கார்த்திகை 2016 செவ்வாய் 15:02 | பார்வைகள் : 9766


 புளூட்டோவில் இருந்து நியூ ஹாரிசன்ஸ் விண்கலம் அனுப்பிய தகவல் மிகவும் காலதாமதமாக 15 மாதம் கழிந்து பூமிக்கு வந்து சேர்ந்துள்ளது.

 
சூரிய குடும்பத்தை சேர்ந்த 9 கிரகங்களில் கடைசி வரிசையில் இருக்கும் புளூட்டோவிற்கு நாசா நியூ ஹாரிசன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியது.
 
புளூட்டோவில் ஆய்வு மேற்கொண்டு வரும் இந்த விண்கலம் கிரகத்தின் புகைப்படம் மற்றும் தகவல்களை 2015ஆம் அண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி அனுப்பி வைத்தது.
 
அந்த தகவல் 15 மாதங்கள் கழித்து கடந்த வாரம்தான் பூமிக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆனால் இந்த தகவல் ஒரே நாளில் வந்து சேர்ந்திருக்க வேண்டும். 8 ஆயிரம் மைல் தொலைவில் தடைப்பட்டு தற்போது தான் வந்து சேர்ந்துள்ளது.
 
விண்கலத்தில் உள்ள டிரான்ஸ்மீட்டர்களில் இருந்து ரேடியோ சிக்னல் கிடைப்பதில் தடங்கள் ஏற்பட்டதால், தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை என்று புளூட்டோ கிரகத்தின் ஆய்வு திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்