Paristamil Navigation Paristamil advert login

சனிக்கிரகத்தின் டையோன் நிலவில் தண்ணீர் கண்டுபிடிப்பு

சனிக்கிரகத்தின் டையோன் நிலவில் தண்ணீர் கண்டுபிடிப்பு

7 ஐப்பசி 2016 வெள்ளி 13:16 | பார்வைகள் : 12090


 சனிக்கிரகத்தின் நிலவான டையோனின் (Dione) நிலத்தடியில் பல கிலோமீட்டர்கள் ஆழத்தில் கடல் நீரோட்டம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 
இதன்மூலம் அங்கு நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
 
சனிக்கிரகத்தை சுற்றும் டைட்டன் (Titan), என்சலட்டஸ் (Enceladus) ஆகிய இரு நிலவுகளும் பனிக்கட்டிக்கு அடியில் கடலை மறைத்து வைத்திருப்பதாக ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
 
இந்நிலையில், மற்றொரு நிலவான டையோனிலும் கடல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
பெல்ஜியத்தின் ரோயல் ஆய்வக விஞ்ஞானிகள் இதனைக் கண்டறிந்துள்ளனர்.
 
டையோன் நிலவின் நிலத்தடிக்குக் கீழே 100 கி.மீ ஆழத்தில் அந்தக் கடல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
அந்தக் கடலைச் சுற்றி மிகப் பெரிய பாறை படிமங்கள் அமைந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
 
இதன் மூலம் நீண்ட ஆயுள் கொண்ட நுண்ணுயிர்கள் அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்