Paristamil Navigation Paristamil advert login

கிரகங்கள் உருவானதை கண்டறிய நாசா தீவிரம்

கிரகங்கள் உருவானதை கண்டறிய நாசா தீவிரம்

19 ஆவணி 2016 வெள்ளி 17:46 | பார்வைகள் : 9940


 அமெரிக்காவின் நாசா மையம் கிரகங்கள் உருவானதை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

 
இதற்காக வருகிற செப்டம்பர் 8ம் திகதி புளோரிடாவில் உள்ள கேப் கானவரல் விமான படை தளத்தில் இருந்து ‘அட்லஸ் 5 411’ என்ற ராக்கெட் ஒன்றை விண்ணில் ஏவவுள்ளது.
 
சூரியனை சுற்றி வரும் பென்னு என்ற குறுங்கோளின் மண் மாதிரியை எடுத்து வந்து ஆய்வு மேற்கொள்ள இந்த ராக்கெட் ஏவப்படுகிறது.
 
‘ஓசிரிஸ்-ரெஸ்’ எனப்படும் செயற்கைகோள் உடன் பயணிக்கும் ‘அட்லஸ் 5 411’ என்ற ராக்கெட், பூமியில் இருந்து விண்ணில் 2110 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பென்னு குறுங்கோளை 2018ம் ஆண்டு சென்றடையும்.
 
அங்கு தரை இறங்கும் ஓசிரிஸ்-ரெஸ் செயற்கைகோள் பென்னு குறுங்கோளின் மேற்பரப்பில் இருந்து 60 முதல் 2 ஆயிரம் கிராம் எடையுள்ள மண் மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2023ம் ஆண்டு பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்