அணு ஆயுத யுத்தத்தை ஏற்படுத்த தூண்டிய சூரிய புயல்
12 ஆவணி 2016 வெள்ளி 00:17 | பார்வைகள் : 10057
பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது 1967 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய புயல் ஒன்று அணு ஆயுத யுத்தத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கி இருந்தமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்க கண்காணிப்பு ராடார்கள் முடக்கப்பட்டதை அடுத்து 1967 மே மாதத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான யுதத்திற்கு அமெரிக்க போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த ராடார் தடங்கலுக்கு சோவியத் ஒன்றியம் காரணம் இல்லை என்பது பின்னர் கண்டறியப்பட்டதை அடுத்தே பதற்றம் தணிந்துள்ளது.
சூரிய புயல் ஒன்றே அமெரிக்க ராடார் கட்டமைப்பை முடக்கி இருப்பதை அமெரிக்க இராணுவம் கண்டறிந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்த விபரம் அமெரிக்க புவியியல்சார் ஒன்றிய சஞ்சியில் தற்போது முதல் முறை வெளியாகியுள்ளது. புவி அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி அமெரிக்க தேசிய பாதுகாப்பில் தீர்க்கமான பங்கு வகிப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவினர் விளக்கியுள்ளனர்.
1967, மே 23 ஆம் திகதி ஏற்பட்டிருக்கும் இந்த சூரிய புயல் பாதிப்பால் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தளங்களின் ராடார் கட்டமைப்பே முடங்கியுள்ளது.