Paristamil Navigation Paristamil advert login

உயிரினங்கள் வாழக்கூடிய 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு

 உயிரினங்கள் வாழக்கூடிய 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு

6 ஆவணி 2016 சனி 11:55 | பார்வைகள் : 9787


 புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிககாவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாயந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க விட்டுள்ளது.

 
கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 150,000 நட்சத்திரங்களை கண்காணித்து வருகிறது, இவற்றில் 4,000 இற்கும் மேற்பட்டவை முக்கிய கிரகங்களாக வகைபடுத்தப்பட்டுள்ளது.
 
அதுகுறித்த ஆய்வுகள் மேற்கொண்டுள்ள நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளவைகளில் உயிரினங்கள் வாழ தகுதியுள்ளதாக 216 கிரகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
 
அவற்றில் 20 கிரகங்கள் பூமியை போன்று உயிரினங்கள் வாழ மிகவும் தகுதியுள்ளவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு பூமியில் இருப்பது போன்ற மனுக்கள் மற்றும் பாதைகள் உள்ளன.
 
இந்த கிரகங்கள் நட்சத்திரங்களை ஒட்டியுள்ளது. அதன் மூலம் அங்கு சூரிய ஒளி, தண்ணீர் போன்றவை இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்