40 ஒளியாண்டு தொலைவில் இரு பாறை உலகங்கள் கண்டுபிடிப்பு
22 ஆடி 2016 வெள்ளி 00:01 | பார்வைகள் : 9340
பூமியில் இருந்து 40 ஒளியாண்டு தொலைவில் ஒரே நட்சத்திரத்தை ஓரே நேரத்தில் வலம் வரும் உயிர் வாழ சாத்தியம் கொண்ட இரு பாறை உலகங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நேச்சர் சஞ்சிகையில் வெளியாகி இருக்கும் ஆய்வு முடிவுகளின்படி இந்த இரு கிரகங்களும் பூமி மற்றும் செவ்வாயைப் போன்று அடர்த்தியான வளிமண்டலத்தை கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாஸாவின் ஹப்பில் விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன் டர்ரபிஸ்ட் -- 1 நட்சத்திர மண்டலத்தை அவதானத்தே குறித்த இரு கிரகங்களும் தனது நட்சத்திறத்திற்கு முன்னால் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு கிரகங்களும் தனது நட்சத்திரத்தை வலம் வர வெறும் 1.5 மற்றும் 2.4 பூமி நாட்களே எடுத்துக் கொள்கின்றன. இவை தனது நட்சத்திரத்தை மிக நெருங்கி இருந்த போதும் அங்கு திரவ நீர் உருவாக வாய்ப்புக் கொண்ட மிதமான வெப்பநிலை இருக்க சாத்தியம் உள்ளதாக ஆய்வுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். டர்ரபிஸ்ட் -- 1 குளிர் கொண்ட குள்ள நட்சத்திரம் என்பதோடு அது வியாழனை விடவும் சற்று பெரிய மங்கலானதாக உள்ளது.