Paristamil Navigation Paristamil advert login

பூமியைச் சுற்றும் சிறு கோள் 2016 HO3 என பெயரிடப்பட்டுள்ளது

பூமியைச் சுற்றும் சிறு கோள் 2016 HO3 என பெயரிடப்பட்டுள்ளது

21 ஆனி 2016 செவ்வாய் 09:16 | பார்வைகள் : 9575


 பூமியைச் சுற்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறு கோள் தொடர்பான விபரங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகின்றார்கள்.

 
பூமிக்கு அருகில் உள்ள அல்லது கால் செயற்கைக் கோள் என்று அழைக்க உதாரணமாகக் கருதப்படும் இந்த சிறு கோளுக்கு 2016 HO3 என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
பூமியைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் வலம் வருவதைப் போல் உள்ள இந்த சிறுகோள், பூமியுடன் சேர்ந்து சூரியனையும் சுற்றி வருகிறது.
 
இந்தக் கோளை, பூமியும் சூரியனும் மாறி மாறி ஈர்ப்பதால், அது பல நூறாண்டுகளுக்கு ஈர்ப்பு சக்தியால் உந்தப்பட்டு, அங்குமிங்கும் மாறி மாறித் தாண்டும் இயக்கத்தில் இருக்கும் என்று கலிஃபோர்னியாவில் உள்ள ஜெட் உந்துசக்தி ஆய்வக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்தச் சிறுகோள், 100 மீட்டர் அகலத்துக்கு அதிகமாக இருக்காது என்று கருதப்படுகிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்