Paristamil Navigation Paristamil advert login

மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம்!

மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம்!

20 சித்திரை 2016 புதன் 16:24 | பார்வைகள் : 10197


 மனிதர்கள் வசிப்பதற்கு பூமியை தவிர ஏற்ற வேறு கிரகம் உள்ளதாக என விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 
இதனொரு பகுதியாக நிலவில் மனிதர்களை குடியமர்த்துவது, செவ்வாய் கிரகத்தில் குடி அமர்த்துவதற்கான வாய்ப்புகள் உண்டா என்பது குறித்து தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் பூமியில் இருந்து 16 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியை போன்றே மனிதர்கள் வாழ்வதற்கு சாத்திய கூறுகள் நிறைந்த கிரகம் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்..
 
GJ 832 என பெயரிடப்பட்டுள்ள நட்சத்திரத்தை அந்த கிரகம் சுற்றி வருவதாக கூறியுள்ள விஞ்ஞானிகள் மனிதர்கள் வாழ்வதற்கு அந்த கிரகம் தகுதியுடையதாகவும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
 
சிவப்பு குள்ள நட்சத்திரம் என்று அழைக்கப்படும் இந்த GJ832, சூரியனின் பாதி அளவை உடையது. இந்த நட்சத்திரத்தை சுற்றி வரும் கிளீஸ் 832 c என்ற கிரகத்தையே பூமியை போல் உள்ளதாக விஞ்ஞானிகள் முதலில் தெரிவித்திருந்தனர்.
 
தற்போது, அந்த கிரகம் நமது வீனஸ் கிரகத்தை போன்றதாக இருக்கலாம் என்றும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகமே பூமியை போன்றது என்று தெரிவித்துள்ளனர்.
 
ஒருவேளை அங்கு மனிதர்கள் வாழ்வதற்கு சாத்திய கூறுகள் இருந்தால் இந்த ஆராய்ச்சி அடுத்த கட்டத்துக்கு செல்லலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்