வானில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு நிலா!
21 வைகாசி 2017 ஞாயிறு 10:19 | பார்வைகள் : 9884
ஒரு நிலவுக்கே ஓவராக கவிதை எழுதும் பொயட்டுகளுக்கு ஓர் நற்செய்தி. ஆமாம் கவிஞர்களே, இப்போது வானில் இன்னொரு நிலவை கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்!
சூரிய குடும்பத்தில் உள்ள நெப்டியூன் கோளுக்கு அருகில் உள்ள குயிர்பெர் மண்டலத்தில், 1,500 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, குள்ளமான கிரகம் ஒன்று உள்ளது. இதற்கு ‘2007 OR10’ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
இந்த குள்ள கிரகத்தில் நிலா ஒன்று இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலா ஏறத்தாழ 400 கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கலாம் என ஹப்பிள் தொலைநோக்கி மூலம் கணிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நிலா கண்டுபிடிக்கப்பட்டதற்கான அறிவிப்பை நாசா விஞ்ஞானி மார்டோன் அறிவித்துள்ளார்.