பூமியை போன்று காணப்பட்ட செவ்வாய் கிரகம்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்
18 வைகாசி 2017 வியாழன் 11:32 | பார்வைகள் : 9845
360 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகம் இன்றைய பூமியை போல உயிரினங்கள் வாழ தகுதியான இடமான இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ தேவையான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், 360 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகம் இன்றைய பூமியை போல எல்லா வித உயிரினங்களும் வாழ தகுதியான இடமாக இருந்தது.
அதன் பின்னர், செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய விண்கல் மோதிய சுவடுகள் உள்ளது. இவ்வாறான மோதலினால் சிதறிய விண்கற்களில் 7.5 சதவிதம் பூமியை வந்தடைந்தன என கூறியுள்ளார்கள்.
அமெரிக்கா விஞ்ஞானிகள் கடந்த 1984ல் அண்டார்டிக்காவில் 1.95 கிலோ எடை கொண்ட விண்கல்லை கண்டெடுத்தார்கள். இது செவ்வாயிலிருந்து விழுந்த விண்கல்லாக இருக்க வாய்ப்புள்ளது.
இதனிடையில் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்கிறதா என ஆய்வு செய்ய ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை புதிய விண்கலத்தை இன்று செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புகின்றன.
மேலும், செவ்வாயில் வரும் 2039-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை தரையிறக்க வைக்க முடியும் என நாசா விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
செவ்வாயில் பெய்த கடும் மழையால் பூமியின் மேற்பரப்பை போன்றே செவ்வாய் கிரகம் மாறியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.