Paristamil Navigation Paristamil advert login

செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்ய திட்டமிடும் நாசா..!

செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்ய திட்டமிடும் நாசா..!

6 வைகாசி 2017 சனி 13:47 | பார்வைகள் : 11579


 வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் பல அதிநவீன யுத்திகளை பயன்படுத்தி செவ்வாய் கிரகம் அல்லது நிலாவில் விவசாயம் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

 
அரிஜோனா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்களும், நாசா விஞ்ஞானிகளும் இணைந்து செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்யும் ஆராய்ச்சியை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். அதற்கான சூழ்நிலைகள் மற்றும் சாத்திய கூறுகள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 
பூமியை போன்று விவசாயம் செய்வதற்கு ஏற்ற தகவமைப்புகள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக கூறும் நாசா விஞ்ஞானிகள் அங்கு விவசாயம் செய்வதன் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே பசுமைகுடில் தொழில்நுட்பம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. இதே தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் தங்கிருக்கும் அறைகளில் விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்த முழுமையான வடிவமைப்பும், தொழில்நுட்பமும் பூமியில் விவசாயம் செய்யும் தொழில்நுட்பத்தை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, செவ்வாயில் எந்தெந்த தாவரங்கள், விதைகள் தேவை என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விண்வெளியில், தாவரங்களுக்கு சூரிய ஒளிக்குப் பதிலாக சிறப்பு வாய்ந்த விளக்குகளால் ஒளி பயன்படுத்தப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்