சனி வளையங்களுக்கு நடுவே பூமிப் பந்து!
5 வைகாசி 2017 வெள்ளி 13:57 | பார்வைகள் : 9792
அமெரிக்க விண்வெளி அமைப்பான, 'நாசா' அனுப்பிய, 'காசினி' விண்கலம், சனி கிரகத்தை சுற்றி உள்ள ஏராளமான வளையங்களுக்கு நடுவே புகுந்து பயணித்து வருகிறது.
சனியின் துருவப் பகுதியில் திரண்டுள்ள அறுங்கோண வடிவ புயல், அதன் வட்ட வடிவ மையம் ஆகியவற்றை, காசினி அருமையாகப் படம் பிடித்து அண்மையில் அனுப்பிஉள்ளது.
சனியின் மேக மூட்டத்திலிருந்து 1,900 கி.மீ., தொலைவிலிருந்து அது இப்படங்களை எடுத்து அனுப்பியது.
அதுமட்டுமல்ல, காசினி, இப்போதுள்ள இடத்திலிருந்து, 87 கோடி மைல் தொலைவில், சிறிய ஒளிப் புள்ளியாகத் தெரியும் நம் பூமியை, அதுவும், சனியின் வளையங்களுக்கிடையே உள்ள இடைவெளியில் தெரியும்படி படம் பிடித்து அனுப்பியுள்ளது!