Paristamil Navigation Paristamil advert login

அட்லாண்டிக் கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய கனிம மலை!

அட்லாண்டிக் கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய கனிம மலை!

13 சித்திரை 2017 வியாழன் 10:33 | பார்வைகள் : 9483


 அரிய கனிமங்கள் செறிவாக இருக்கும் பாறைப்படிமங்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 
பூமியிலேயே அதிகபட்ச அரிய கனிமங்களின் குவியலாக இது வர்ணிக்கப்படுகிறது.
 
அட்லாண்டிக் கடலின் ஆழத்திலிருக்கும் மிகப்பெரிய மலையில் இவை இருக்கின்றன.
 
இயற்கையின் மிகப்பெரிய பொக்கிஷமாக வர்ணிக்கப்படும் இந்த படிமங்களில் இருக்கும் அரிய கனிமங்கள், மின்னணுத்தொழில் முதல் சூரிய மின்சாரத்தகடுகள் வரை பயன்படக்கூடியவை.
 
இவை பெரும் மலையாக குவிந்திருப்பது விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், இவற்றை வெட்டி எடுக்கும்போது ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பும் அதனால் கடல்வாழ் உயிரிகள் பெருமளவு உயிரிழக்க நேரும் ஆபத்தும் பெரும் கவலையை அதிகரித்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்