செவ்வாய் கிரகத்தில் பீர் பாட்டில்?
19 பங்குனி 2017 ஞாயிறு 08:17 | பார்வைகள் : 9581
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, நாசா செவ்வாய் கிரகத்தில் பீர் பாட்டில் உள்ளது என்று அதற்கான புகைப்படங்களுடன் உறுதி செய்துள்ளது.
செவ்வாயில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை, அப்போலோ விண்கலத்தின் மூலம் மேற்கொற்கொண்டு வருகிறது. 2033 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்றும் நாசா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது செவ்வாய் கிரகத்தில் மது பாட்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் மது பாட்டில் புகைப்படம், கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாமஸ் மில்லர் (64) எனும் ஆய்வாளர், நவம்பர் மாதம் முதல் ஆய்வை மேற்கொண்டு, இது பீர் பாட்டில்தான் என உறுதி செய்துள்ளார். பூமியில் பயன்படுத்துவது போன்று பல பொருட்கள் அங்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் பதிவாகியுள்ளது.
முன்னதாக, டிசம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஸ்பூன் போன்ற வடிவமும் பதிவாகி இருந்தது. நாசாவின் இத்தகைய புகைப்படங்களும் அதை உறுதி செய்யும் ஆய்வுகளும் அங்கு மனிதர்கள் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.