வெடித்து சிதறிய நெபுலா நட்சத்திரம்!
6 மாசி 2017 திங்கள் 14:37 | பார்வைகள் : 9821
நாசா ஆராய்ச்சி மையம், ஹப்பில் என்ற தொலை நோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில் சூரியனின் அளவுள்ள ஒரு மிகப்பெரிய நெபுலா என்ற நட்சத்திரம் வெடித்தது காட்டப்பட்டுள்ளது. சூரியனை போல மாசுக்கள் மற்றும் வாயுக்களால் ஆனது நெபுலா.
நெபுலாவை எப்போதும் சுற்றி திரியும் மாசுக்கள், மிக அதிக வேகத்தில் சுற்றிய போது ஏற்பட்ட மோதலில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
நெபுலா வெடித்ததைத் தொடர்ந்து அதிலிருந்து பல பொருட்கள் 6 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் வெளிவருவதாகவும் நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெபுலாவை சுற்றியுள்ள வாயுவானது சல்பர் என்பதால், அதன் மனம் மிக மோசமாக இருக்கும். இதற்கு அழுகிய முட்டை என்ற மற்றொரு பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.