9% அதிக வேகத்தில் விரிவடையும் பிரபஞ்சம்!
29 தை 2017 ஞாயிறு 13:01 | பார்வைகள் : 10754
நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் பிரபஞ்ச நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஏராளமான ஆச்சரியம் மிகுந்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரபஞ்சம் ஒரு புள்ளியில் இருந்து வெடித்துச் சிதறி, தொடர்ந்து விரிவடைந்து கொண்டே செல்கிறது. பின்னர் ஒரு கட்டத்தில் சுருங்க ஆரம்பிக்கும் என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகம் குறித்து கணக்கிடப்பட்டுள்ளது.
முன்னதாக புகழ்பெற்ற அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூற்றுப்படி, பிரபஞ்ச வேகம் அளவிடப்பட்டது. இதற்கிடையில் தற்போது கண்டறியப்பட்ட தகவலின்படி, பிரபஞ்சம் 5-9 % வேகமாக விரிவடைந்து வருகிறது. இந்த தகவல்கள் கருந்துளை குறித்த படிப்பினைக்கு உதவிகரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.