Paristamil Navigation Paristamil advert login

லெமூரிய கண்டம்?

லெமூரிய கண்டம்?

24 ஆவணி 2012 வெள்ளி 16:35 | பார்வைகள் : 8946


நம்மில் எத்தனை பேர் லிமோரியாக் கண்டன் ஒன்று இருந்ததாக அறிந்திருக்கிறோம்? அப்படி ஒரு கண்டம் இருந்து பின்னர் அது கடல்கோள் காரணமாக கடலில் மூழ்கியதாக வரலாறு சொல்கிறது. இந்தியா சீனா, உட்பட இலங்கை தொடக்கம் மடகஸ்கார் மற்றும் மாலை தீவு அத்துடன், அவுஸ்திரேலியா அடங்கலாக ஒரு பெரிய கண்டம் இருந்தது. அதாவது இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா வரை நடந்தே செல்லும் அளவுக்கு இந்தக் கண்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இக் கண்டத்திலேயே முதல் முதல் மனித இனம் தோன்றியதாகவும், பின்னர் படிப்படியாக அவர்கள் பல நாடுகளுக்குச் சென்றதாகவும் ஆங்கில விஞ்ஞானிகள் தெரிவிக்க்கின்றனர். உலகில் முதல் முதல் தோன்றிய மனிதன் கறுப்பு இன மனிதன் என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
லிமோரியாக் கண்டம் (lemuria) என்று நீங்கள் இணையத்தளங்களில் தேடிப்பார்ப்பீர்களானால், பல சுவாரசியமான விடயங்கள் வெளிவரும். அதாவது ஆணும் பென்ணும் ஒன்றாகக் கலந்த உருவமுடைய, கடல் வாழ் இனமாக மனிதன் முதலில் தோன்றியதாகவும், பின்னர் அந்த கடல்வாழ் பிராணி, தரையை அடைய பல மில்லியன் ஆண்டுகள் ஆனதாகவும் கூறப்படுகிறது, முதலை, நண்டு, போல கடலிலும் தரையிலும் வாழ கற்றுக் கொண்ட சில பிராணிகளில் நாமும் ஒருவகை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பின்னர் பரிணாம வளர்ச்சி காரணமாக இந்தப் பிராணிகள், கடலைவிட தரையிலேயே கூடுதலாக வாழக் கற்றுக் கொண்டன. இதன் காரணமாக இதன் இனப் பெருக்கம் வாழ்க்கை முறை என்பன தரையிலேயே தொடர ஆரம்பித்தன.
அதென்ன ஆணும் பெண்ணும் கலந்த உயிரினம் என்று கேட்கிறீர்களா, ஆம் அப்படிப்பட்ட ஒரு உயிரினம் இந்த உலகில் மிச்சம் உண்டு. ஆபிரிக்க காடுகளில் வாழும் ஒரு வகை நாக்குளிப் பூச்சிகள் ஆணும் பெண்ணும் உள்ளடக்கியவை எனக் கண்டறியப்பட்டுள்ளது, இனப் பெருக்கத்திற்கு ஆண் பெண்ணையோ அல்லது பெண் ஆணையோ நாடவேண்டியது இல்லை, அதுவாகவே கருத்தரிக்கிறது. இவ்வாறு அடையாளம் காணப்படாத ஆண் பெண் இருபாலும் கலந்த உயிரினம் வேறு சிலவும் இந்த உலகில் இருக்கலாம்.
பரிணாம வளர்ச்சி என்பதுடன் இயைவாக்கம் அடைவது என்பதும் மிகவும் முக்கியமான ஒன்று, அது இந்த பூமியில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அதாவது இலங்கையில் நிற்கும் ஒரு ஆட்டை அல்லது மாட்டை , ஐரோப்பாவிற்கு கொண்டுவந்தால், அது இங்கிருக்கும் குளிருக்கு ஏற்றவாறு தன்னை இயைவாக்கம் அடையச் செய்யும், அது சில ஆண்டுகள் ஆகலாம் அல்லது, அது ஈன்றெடுக்கும் பிள்ளைகளாக இருக்கலாம், ஒரு வகையில் இயைவாக்கம் அடைந்தே தீரும் அதுவே ஆச்சரியம். அதாவது மாட்டின் தோல் கூடுதலான கொழுப்பைச் சேர்த்து , தோலின் மொத்தத்தை அதிகரித்தல், மற்றையது தோலில் கூடுதலான ரோமங்களை ஹர்மோன்கள் உருவாக்கும். இந்த ரோமங்கள் கூடுதலாக வளர்ந்தால் குளிரை தாங்கும் சக்தி இயற்கையாகவே உருவாகும்... இதுவே இயைபாக்கம் அடைவது. அதாவது ஒன்றை உள்வாங்கிக் கொள்வது எனலாம்.

லிமோரியாக் கண்டத்தின் வரைபடத்தை நாம் உற்றுநோக்கினால், அது இந்தியா, இலங்கை அவுஸ்திரேலியா அடங்கலாக பரந்து விரிந்து இருந்த ஒரு பாரிய கண்டம். அதில் இலங்கைக்கும் மாலை தீவிற்கும் இடையில், பெரு ஆறு, குமரி ஆறு, மூதாறு என்று பல ஆறுகள் ஓடியதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது, அதாவது தற்போது கடலில் மூழ்கியிருக்கும் பரப்புகளில் ஒரு காலத்தில் அவை கடலுக்கு மேல் மட்டத்தில் இருந்த வேளை அங்கு ஆறுகள் கூட ஓடியுள்ளன. தற்போது மாலை தீவு என்றழைக்கப்படும் பகுதி ஒரு காலத்தில் ஓலை நாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. அதாவது லிமோரியாக் கண்டம் என்ற ஒன்று இந்தப் பூமியில் இருந்து பின்னர் அழிந்து போனது என்பதற்குச் சான்றாக உள்ளது இலங்கைத் தீவு, மாலை தீவு, மற்றும் மடகஸ்கார் தீவுகள் ஆகும். இவை கடலுக்கு நடுவில் இன்னமும் காணப்படுவதே அதன் கடைசி இருப்பின் ஆதாரமாகும்.
பல நூறு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு பாரிய நில நடுக்கம் காரணமாக, லிமோரியாக் கண்டம் துண்டுகளாக உடைந்தது, என்றும் அப்போது ஏற்பட்ட சுனாமியால் பல பகுதிகள் கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது, அதில் மிக மிக உயரமாக, இலங்கை, மடகஸ்கார் மற்றும் மாலை தீவு போன்ற பகுதிகளே மிஞ்சி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது லிமோரியாக் கண்டத்தில் அதி உயர் மட்டத்தில் இருந்த இடங்களே தற்போது மிஞ்சி இருக்கும் சில நாடுகள். அதற்கு நல்ல எடுத்துக் காட்டு, மாலை தீவுகள். சுமார் 2,000 தீவுகள் இங்கு உள்ளது. அங்கு சென்று கடலுக்கு அடியே சுழியோடினால், மாலை தீவின் அடித்தளம் தெரியும். அங்கு பார்த்தால் மாலை தீவு ஒரு செங்குத்தான மலை என்பதைக் கண் கூடாககாணலாம், அதாவது கடலில் குச்சிகளை நட்டுவைத்தது போல இருக்கும்.
லிமோரியாக் கண்டத்தில் தோன்றிய மனிதன் போன்ற உருவமைப்புக் கொண்ட பிராணிகள் ஒளிரும் தன்மை உடையவை எனக் கூறப்படுகிறது, கடல் வாழ் பிராணிகள் சில தாமாகவே பலவண்ண ஒளிக்கதிர்களை தோற்றுவிக்கக் கூடியவை, உதாரணமாக ஜெல்லி மீன்கள். அதே போல பல விதமான நிறங்களுடன் கூடிய ஒளிக்கீற்றைத் தோற்றுவிக்கக் கூடிய, ஒரு பிராணியாக மனிதன் இருந்திருக்கவேண்டும் எனவும், கடலுக்கு அடியில் காணப்படும் சில கிறிஸ்டல்களை அவர்கள் வெளிச்சத்திற்கு பாவித்து வந்ததாகவும் ஊகங்கள் இருக்கின்றன. இதனாலேயே தற்போதும் மனிதன் உருவாகுவது பன்னீர் குடம் என்று அழைக்கப்படும் ஒரு திரவத்தில் தான். தாயின் கருப்பையில் காணப்படும் இந்த திரவ பலூனுக்குள் தான் இன்றுவரை மனிதன் உருவாகிறான்.
இவ்வாறு சில கண்டங்கள் அல்லது பாரிய நிலப்பரப்புக்கள் , நீரில் மூழ்கியதற்கு இந்து மதத்திலும் ஒரு சாட்சி இருக்கிறது, பகவத் கீதையிலும் சரி, மகாபாரத்த்திலும் சரி கண்ணன் ஆண்டுவந்த மதுரா என்னும் நகரம் கண்ணபிரான் இறந்ததும் கடலில் மூழ்கியதாக வரலாறு சொல்கிறது, அதாவது தான் ஆண்ட மதுரா நகரம் தான் இறந்ததும் நீரில் மூழ்கிவிடும் என கண்ணபிரான் சொல்கிறார், ஆகவே அங்கிருக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு காயப்பட்டு உயிர் பிரியும் நிலையில் உள்ள கண்ணபிரான் சொல்வதாக பாரதத்தில் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் மதுரா நகரம் என்று ஒன்று உண்மையாகவே கடலில் புதைந்து கிடப்பதை ஆராச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதற்காக கண்ணபிரான் வாழ்ந்தார் பின்னர் இறந்தார் என்பதை நாம் உறுதிப்படுத்துவதாகச் சொல்லவில்லை, புராண நூல்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையிலேயே கண்ணன் என்று அழைக்கப்படும் கடவுள் அந்தக் காலத்தில் ஒரு விஞ்ஞானியாகவும் இருந்திருக்கலாம், மறுப்பதற்கு இல்லை. இருப்பினும் மதுரா நகரம் எவ்வாறு அழிந்தது? ஏன் டைனசோர்கள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் மனிதன் தோன்றினான்? உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் 5அறிவு ஆனால் மனிதனுக்கு 6 அறிவு என்று ஏன் சொல்லவேண்டும், மற்றைய ஜீவராசிகளை விட நாம் ஏன் பல நூறு மடங்கு முன்னேறி, அறிவில் சிறந்து விளங்கவேண்டும்? என்று பல கேள்விகள் எமக்குள் எளத்தான் செய்கின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்