முதன்முறையாக செவ்வாய்க்கு செல்லும் பெண் விஞ்ஞானிகள்

17 தை 2016 ஞாயிறு 19:57 | பார்வைகள் : 12488
வரலாற்றில் முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு 4 பெண் விஞ்ஞானிகளை அனுப்ப நாசா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது அவர்களுக்கு அங்கு எவ்வாறு செயற்படுவது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பயிற்சி அவர்களை இந்த நீண்ட பயணத்திற்கு தயார் படுத்திக்கொள்ள உதவும் என நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹார்வர்ட் மருத்துவ பள்ளி பேராசிரியர் மற்றும் நாசாவில் விண்வெளி தொடர்பாக கற்றலில் ஈடுபட்டிருந்த மூவர் உள்ளிட்ட நான்கு பெண்களே குறித்த பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதை காட்டிலும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது தமக்கு சவாலான காரியம் என நாசா தெரிவித்துள்ளது.
இதே வேளை , செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதாக சொல்லப்பட்டாலும் அவை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.