Paristamil Navigation Paristamil advert login

பெண்களே அழகான முன்னழகை பெற...

பெண்களே அழகான முன்னழகை பெற...

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 11286


 பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தொங்கும் மார்பகங்கள். இந்த பிரச்சனையை பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். மேலும் இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் தாங்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாது.

ஒரு குறிப்பிட்ட ஆடைகளைத் தான் அணிய முடியும். ஏனெனில் ஒருசில ஆடைகளை அவர்களை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும். பொதுவாக மார்பகங்கள் வயதாகினால், தாய்ப்பால் கொடுப்பதால், சரியான உள்ளாடைகளை அணியாததால், ஊட்டச்சத்து குறைப்பாட்டினால், இறுதி மாதவிடாய் நெருங்கினால் மற்றும் புவி ஈர்ப்பு விசையினால் தொங்க ஆரம்பிக்கும். 

 
ஆனால் பெண்கள் தங்களின் மார்பகங்கள் தொங்கி காணப்படுவதற்கான காரணங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. மாறாக, அறுவை சிகிச்சை மூலம் அதனை சரிசெய்ய நினைக்கின்றனர். இதனால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும். தொங்கும் மார்பகங்களை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.. 
 
• உடலில் புரோட்டீன் குறைபாடுகள் இருந்தால், அவை மார்பக தசைகளை தளரச் செய்து, மார்பகங்களைத் தொங்கச் செய்யும். ஆகவே புரோட்டீன் உணவுகளுடன், தக்காளி, வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பூண்டு போன்ற காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மார்பகங்களை அழகாக சிக்கென்று வைத்துக் கொள்ளலாம். 
 
• தரையில் படுத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் தரையில் ஊன்றியபடி இடுப்பை இரண்டு அடி மேலே தூக்கியபடி டம்பெல்லை மார்பகங்களுக்கு மேலே தூக்கி 10 வரை எண்ணிக் கொண்டு பிடித்திருக்க வேண்டும். பின் அதனை மார்பகங்களுக்கு பக்கவாட்டில் மடிக்கி 10 வரை எண்ணிப் பிடிக்க வேண்டும். இதுப்போல் தினமும் 10 முறை செய்தால், மார்பகங்கள் தளர்ச்சி  அடைவதை   தடுக்கலாம். 
 
• புஷ் அப்: விரிப்பில் குப்புறப்படுத்துக் கொண்டு, கைகளை தரையில் மார்பகங்களுக்கு நேராக நீட்டி உடலே மேலே தூக்கி, கால்களை மேல்புறமாக தூக்கி, தரையைத் தொடாமல் முன்புறமாக குனிந்து 20 வரை எண்களை எண்ணி, பின் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வேண்டும். இதுப்போன்று தினமும் 20 முறை செய்து வந்தாலும், தொங்கும் மார்பகங்களை சரிசெய்யலாம். 
 
• தினமும் 15 நிமிடம் கையால் மேல்புறமாக மார்பகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மார்பகத்தில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மார்பகங்களில் உள்ள திசுக்கள் மற்றும் தசைகளை வலிமையாக்கி, மார்பகங்கள் தளர்ந்து இருப்பதை சரிசெய்யும். பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் மார்பகங்களை மசாஜ் செய்து வந்தாலும், மார்பகங்களானது இறுக்கமடைய ஆரம்பிக்கும். 
 
• மார்பகங்களுக்குப் பொருந்தாத அல்லது மிகவும் லூசான பிராவை அணிந்தாலும், மார்பகம் தொங்க ஆரம்பிக்கும். ஆகவே சரியான பிராவை அணிவதோடு, பெரிய மார்பகங்கள் இருப்பவர்கள், பேடு கொண்ட ஸ்பெஷல் பிராவை அணிவது நல்லது.

எழுத்துரு விளம்பரங்கள்