Paristamil Navigation Paristamil advert login

சரும பிரச்சனைகளை போக்கும் விளக்கெண்ணெய்

சரும பிரச்சனைகளை போக்கும் விளக்கெண்ணெய்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 8668


  சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள விளக்கெண்ணெய் மிகவும் சிறப்பான பொருள். முகப்பரு, வறட்சியான சருமம், ஸ்ட்ரெட்ச் மார்க் மற்றும் சூரியக்கதிர்களால் சருமத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு விளக்கெண்ணெய் நல்ல தீர்வை வழங்கும். 

 
ஏனெனில் அதில் ஆன்டி-செப்டிக் மற்றும் கிளின்சிங் தன்மை நிறைந்திருப்பதால், இது சருமத்தில் ஏற்படும் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வைத் தரும். சரி, இப்போது விளக்கெண்ணெய் கொண்டு எந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வைக் காணலாம் என்று பார்ப்போம். 
 
* முகப்பரு வந்தால் சருமத்தில் அரிப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படும். இதனாலேயே பருக்கள் முகத்தில் பரவிவிடும். பருக்கள் அதிகமாகாமல் இருக்கவும், அவற்றால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். 
 
அதற்கு விளக்கெண்ணெயை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து, 1 மணிநேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், பாக்டீரியாக்கள் மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, பருக்கள் வருவது தடுக்கப்படும். 
 
* விளக்கெண்ணெயை சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இதற்கு அதில் உள்ள கிளின்சிங் தன்மை தான். ஆகவே தினமும் விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை துடைத்து எடுத்தால், முகம் பொலிவோடு பளிசென்று மின்னும். 
 
* தினமும் இரவில் படுக்கும் முன் விளக்கெண்ணெய் கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சருமம் மென்மையாவதை நன்கு காணலாம். விளக்கெண்ணெயை கொண்டு வாரம் மூன்று முறை முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், முகம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் காணப்படும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்