Paristamil Navigation Paristamil advert login

சரும வறட்சியை போக்கும் பால்

சரும வறட்சியை போக்கும் பால்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10473


 வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பல்வேறு தீவிரமான பிரச்சனைகள் குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படும்.      சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலைக் கொண்டு பராமரித்து வந்தாலே சரும வறட்சி நீங்குவதோடு, சருமம் ஆரோக்கியமாக பொலிவோடு இருக்கும். 

 
பால் குளியல் மேற்கொள்வதால், சருமம் மென்மையாக இருப்பதோடு, சருமத்தில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது. பாலில் உள்ள புரோட்டீன் மற்றும் கொழுப்புக்கள் கடினமான சருமத்தை மென்மையாக்குவதோடு, வறட்சியையும் தடுக்கும். 
 
அதற்கு 1 வாளி வெதுவெதுப்பான நீரில் 5 கப் பால் சேர்த்து, 1/2 கப் தேன் மற்றும் விருப்பமான நறுமணமிக்க எண்ணெய்களையும் சேர்த்து குளித்தால், நல்ல மென்மையான சருமத்தைப் பெறலாம். பாலில் வைட்டமின் ஏ என்னும் சரும வறட்சியைத் தடுக்கும் சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே பச்சை பாலை பஞ்சில் நனைத்து, தினமும் 3-4 முறை முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். 
 
இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடு பளிச்சென்று, பருக்களின்றி இருக்கும். பாலில் சிறிது ஒட்ஸ் பொடியை சேர்த்து, முகத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமத்துளைகள் சுத்தமாகி, முகம் பொலிவோடு காணப்படும். 
 
அதிலும் இந்த ஸ்கரப்பை முகத்தில் தடவி ஸ்கரப் செய்த பின்னர், 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி, சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும். பாலில் உள்ள லாக்டிக் ஆசிட், சரும வறட்சி, முகப்பரு, சரும எரிச்சல் போன்றவற்றை சரிசெய்யும். 
 
அதற்கு பச்சை பாலை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாக வறட்சியின்றி இருக்கும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்