சருமத்தை தூய்மையாக்கும் கிளிசரின்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9439
நமது சருமத்தை அழகுப்படுத்தும் குணங்ககள் கிளிசரினில் உண்டு. அழகுப்படுத்துவதிலும் சருமப் பராமரிப்பிற்கும் இப்பொருள் பெருமளவு உதவுகிறது. கிளிசரினை நேரடியாக சருமத்தில் தடவலாம் அல்லது வேறு ஏதேனும் பொருளுடன் சேர்க்கையாகவும் தடவலாம்.
இந்த கலவையை ஃபேஸ் பேக் மற்றும் மாஸ்க்காக அணிந்து கொள்ளவும் முடியும். ஒரு பஞ்சு உருண்டையை எடுத்து அதில் கிளிசரினை நனைத்து சருமத்தில் தடவ வேண்டும். அதை போட்ட சில நொடிகளிலேயே சருமம் ஈரப்பதத்துடன், மென்மையாக காணப்படும். கிளிசரின் சொரசொரப்பான, வறண்ட மற்றும் எரிச்சல் தரும் சருமத்தை குணமாக்க முடியும்.
இதனால் சருமம் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும். ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் இரண்டையும் கலந்து தோலில் உள்ள அழுக்கு மற்றும் தூசி ஆகியவற்றை சுத்தப்படுத்தும் திரவமாக பயன்படுத்தலாம். இரவு தூங்கும் முன்பு இந்த கலவையை கொண்டு முகத்தை துடைத்த பின் தூங்கச் செல்லுங்கள்.
இதை தினந்தோறும் செய்யும் போது சிறந்த வகையில் உங்கள் தோலின் ஓட்டைகளில் இருக்கும் அழுக்குகளை அவை சுத்தப்படுத்தி மென்மையான சருமத்தை தருகின்றன. தினமும் கிளிசரினை புள்ளிகள் மற்றும் பருக்கள் இருக்கும் இடத்தில் பஞ்சு கொண்டு தடவினால் அவைகள் படிப்படியாக மறைந்து விடும்.
ஆனால் பருக்கள் வெடித்த நிலையில் இருக்கும் போது அதிகம் பயன்படுத்த வேண்டாம். மாய்ஸ்ட்ரைசருடன் கிளிசரினையும் சேர்த்து முகத்தில் பேஸ் பேக் மற்றும் மாஸ்க்காக பயன்படுத்தலாம். கிளிசரினின் ஊட்டமூட்டும் மற்றும் மென்மைப்படுத்தும் பயன்களால் தினசரி இதை பயன்படுத்தும் போது சருமம் ஆரோக்கியமாகவும் புத்துணர்வுடனும் காணப்படும்.