Paristamil Navigation Paristamil advert login

ஆண்கள் தங்கள் துணையிடம் தேடும் குணங்கள்....

ஆண்கள் தங்கள் துணையிடம் தேடும் குணங்கள்....

16 ஆனி 2023 வெள்ளி 04:13 | பார்வைகள் : 11408


இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பெரிய விஷயமல்ல. 
 
பெண்கள் தங்கள் துணை தங்கள் மீது அக்கறை உள்ளவராகவும், புத்திசாலித்தனமிக்க ஆளுமையுடையவராகவும் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகின்றனர். 
 
ஆனால், ஆண்கள் தங்கள் துணையிடம் என்ன குணங்களைத் தேடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
 
அதாவது, பெண்களிடம் உள்ள இந்த 5 குணங்களை தான் ஆண்கள் விரும்புகின்றனர். 
 
மேலும். திருமணத்திற்கு முன் காதலிக்கும்போது இதனை ஆண்கள் தேடுகின்றனர். இதுகுறித்து இங்கு முழுமையாகதெரிந்துகொள்ளலாம்.
 
பெண்கள் தங்களை தாங்களே கவனித்துக்கொள்பவராக இருந்தால், அவர்கள் மிகவும் தைரியமாக வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். 
 
தனது கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார். அவர்கள் தாங்களாகவே பெரிய முடிவுகளை எடுக்க வல்லவர்கள். அத்தகைய பெண்களை ஆண்கள் மிகவும் விரும்புகிறார்கள், அவர்களுடன் நட்புக்கொள்ளவும், காதலிக்கவும் கொள்ள விரும்புகிறார்கள்.
 
ஆண்களைப் போல சத்தமாக சிரித்து, ஃபன் செய்ய விரும்பும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்கிறது. 
 
அத்தகைய பெண்களிடம் ஆண்கள் மிக விரைவாக ஈர்க்கப்படுகிறார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் கலகலப்பான பெண்களுடன் நட்பு கொள்ள விரும்புகிறார்.
 
ஒரு சிலரை பார்த்தவுடன் ஈர்க்கும் வகையில் இல்லாவிட்டாலும், அவர்கள் உடற்தகுதியை பராமரிக்கும் பெண்களாக இருந்தால் ஆண்கள் அவர்களை விரும்புகின்றனர். 
 
உண்மையில், ஆண்களின் முதல் கவனம் பெண்களின் உடல் தோற்றத்தில் மட்டுமே செல்கிறது. அத்தகைய சூழ்நிலையில், தங்கள் உடலைப் பராமரிக்கும் பெண்கள் ஆண்களின் இதய ராணியாக மாறுகிறார்கள்.
 
நம்பிக்கையுள்ள பெண்கள் ஆண்களை அதிகம் ஈர்க்கிறார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் சீக்கிரம் பதறாத பெண்ணை ஆண்கள் விரும்புகிறார்கள். 
 
குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு நேரம் செலவழிக்கும் பெண்கள் குறித்து ஆண்கள் பெருமைப்படுகிறார்கள். 
 
அத்தகைய பெண்கள் தங்கள் திறமையால் விரைவில் அனைவருக்கும் பிடித்தவர்களாக மாறுவார்கள்.
 
சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் பெண்களை எல்லோருக்கும் பிடிக்கும். 
 
அத்தகைய பெண்களுடன் நட்பு கொள்ள ஆண்கள் தயங்குவதில்லை. அத்தகைய பெண்கள் தானாகவே ஆண்களின் கவர்ச்சிகரமான பட்டியலில் சேர்ந்துவிடுவர்கள். 
 
பெண்மை என்பதை விட விரைவான புத்திசாலித்தனமான பெண்களையும் ஆண்கள் விரும்புகிறார்கள்.
 

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    2

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்