கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் வார்த்தைகள் என்ன தெரியுமா?
10 ஆனி 2023 சனி 10:52 | பார்வைகள் : 7637
இன்று பல ஆண்கள் கணவன் என்பதன் அர்த்தத்தையே மறந்துவிட்டனர். இதனால் பல குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் அதிகரித்து விட்டன. சமூகங்களுக்கு ஏற்ப திருமணங்கள் வித்தியாசமாக நடந்தாலும், இறுதியாக ஒவ்வொரு மனைவியும் தன் கணவனிடம் இருந்து எதிர்பார்க்கும் சில விஷயங்கள் உள்ளன. ஆனால் பல கணவன்களுக்கு இது புரியாது அல்லது தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.
நீங்களும் இந்த பட்டியலில் இருக்கிறீர்களா.? உங்கள் மனைவி உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னவென்று புரியவில்லையா? சரி, செயலில் வேண்டாம். குறைந்தபட்சம் ஒரு மனைவி தன் கணவரிடம் இருந்து தினமும் கேட்க விரும்பும் பொதுவான சில விஷயங்களையாவது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் உங்களது இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஒவ்வொரு மனைவியும் தன் கணவரிடம் இருந்து கேட்க விரும்பும் பொதுவான விஷயங்களை இங்கே பட்டியலிட்டு உள்ளோம்...
ஐ லவ் யூ : I love you இந்த எளிய 3 வார்த்தைகள் மிகுந்த அபார சக்தியை கொண்டுள்ளன. உங்கள் மனைவி மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை தவறாமல் வெளிப்படுத்துவது, உங்கள் இல்லறத்தை இனிமையாக வழிநடுத்தி செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் தினசரி உங்கள் மனைவியிடம் I love you என சொல்வது அவரை நீங்கள் அன்பாக மற்றும் மதிப்புமிக்கவராக பார்ப்பதை அவருக்கு உணர்த்துகிறது.
நீ மிகவும் அழகாக இருக்கிறாய் : உங்கள் மனைவியின் உடல் தோற்றத்தை அங்கீகரிப்பது மற்றும் மிக அழகாக இருப்பதாக நீங்கள் அடிக்கடி பாராட்டுவது அவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது மற்றும் அவர் தன்னை தான் அட்ராக்ட்டிவ்-ஆக இருப்பதாய் உணர வைக்கிறது.
தேங்க்யூ : கணவர்கள் அலுவலகத்தில் எவ்வளவு வேலை சுமையை சுமக்கிறார்களோ அதை விட பலமடங்கு வேலைகளை இழுத்துப்போட்டு செய்வதில் மனைவிமார்கள் வல்லவர்களாக திகழ்கிறார்கள். இந்த சூழலில் ஒவ்வொரு நாளும் உங்கள் மனைவி செய்யும் சிறிய விஷயங்கள் அல்லது உதவிக்கு கூட உங்களது நன்றியுணர்வை அவரிடம் வெளிப்படுத்தினால் அவரது முயற்சிகளுக்கு உங்களது வார்த்தை வலு சேர்க்கும். சமையலாக இருந்தாலும் சரி அல்லது வேறு ஏதாவது வேலைகளாக இருந்தாலும் சரி தயங்காமல் உங்களது நன்றியை அவ்வப்போது கூறுங்கள்.
உன்னை நினைத்து பெருமைபடுகிறேன்: உங்கள் மனைவியின் சாதனைகள் மற்றும் வெற்றிகளை நீங்கள் பாராட்டி அங்கீகரிப்பது அவரது கடின உழைப்பு மற்றும்அர்ப்பணிப்பை மேலும் வலுவாக்கி அவர்களை உற்சாகப்படுத்துகிறது. அவர் விஷயங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஒவ்வொரு முறையும் உன்னை நினைத்து பெருமைபடுகிறேன் என்று கூறி பாருங்கள். வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.
இன்றைய நாள் எப்படி போனது.? இது வெறும் வார்த்தை மட்டுமல்ல, அவரின் வாழ்க்கை மீதான உங்களது அக்கறையை வெளிப்படுத்தும் ஒன்றாகும். உங்கள் மனைவியின் நாளில் ஆர்வம் காட்டுவது அவரை பற்றி நீங்கள் சிந்திப்பதை அவருக்கு உணர்த்துகிறது.
உனக்காக நான் இருக்கிறேன்: கடினமான சூழல்களில் அல்லது தினசரி உனக்காக நான் இருக்கிறேன் என்று நீங்கள் அவரிடம் கூறும் வார்த்தை , அவருக்காக நீங்கள் எப்போதும் ஆதரவாக நிற்பீர்கள் என்பதை அவருக்கு உணர்த்தி ஒரு பாதுகாப்பு உணர்வை அவருக்கு ஏற்படுத்துகிறது.
நம் வீடு உன்னால் ஸ்பெஷலாக இருக்கிறது: வீட்டில் நிலவும் அமைதியான மற்றும் அன்பான சூழலை உருவாக்குவதில் உங்கள் மனைவியின் பங்கை நீங்கள் அங்கீகரிப்பது, குடும்பத்திற்குள் அவருக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
நீ எனக்கு உத்வேகமாக இருக்கிறாய்: வாழ்க்கையின் பல கட்டங்களில் உங்கள் மனைவி உங்களுக்கு உத்வேகம் அளிக்கிறார் மற்றும் ஊக்கப்படுத்துகிறா என்பதை உங்கள் மனைவிக்கு வெளிப்படையாக தெரியப்படுத்துவது அவரது சுயமரியாதையை அதிகரிக்கிறது.
நான் உன்னை நம்புகிறேன்: நான் உன்னை எப்போதும் நம்புகிறேன் என உங்கள் மனைவியிடம் சொல்வதை விட சிறந்த வார்த்தை வேறு எதுவுமில்லை. உங்கள் மனைவி எடுக்கும் முடிவுகள்மீது உங்களுக்கு நம்பிக்கை இருப்பதை வெளிப்படுத்துவது அவரது முடிவெடுக்கும் திறன்களை நீங்கள் அங்கீகரிப்பதை உறுதிப்படுத்துகிறது.