தொலைபேசிகளில் அடையாள அட்டை - புதிய வசதி
8 புரட்டாசி 2023 வெள்ளி 09:35 | பார்வைகள் : 8932
அடையாள அட்டையினை (carte d'identité) தொலைபேசிகளில் பயன்படுத்தக்கூடியவாறு புதிய செயலி (App) ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
"France Identité" என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியூடாக, அடையாள அட்டை பயன்படுத்தவேண்டிய எந்த ஒரு சூழ்நிலைகளிலும் தொலைபேசியூடாக சமர்ப்பிக்கப்படும் இந்த 'Digital' அடையாள அட்டையினை பயன்படுத்த முடியும். இந்த செயலி Android மற்றும் iOS தொலைபேசிகளில் கிடைக்கிறது.
மேற்படி செயலியில் பதிவேற்றப்பட்ட அடையாள அட்டை, தொலைபேசியின் NFC தொழில்நுட்பமூடாக செயற்படும்.
உங்களது அடையாள அட்டையினை தொலைபேசி கமராவினால் படம் பிடிக்க வேண்டும். பின்னர் அடையாள அட்டையில் உள்ள ஆறு இலக்கங்களை உள்ளிட வேண்டும். இப்போது உங்களது அடையாள அட்டை பதிவேற்றப்பட்டுவிடும்.
பொது போக்குவரத்துக்களில் பயன்படுத்துவது போல், பணம் செலுத்த பயன்படுத்துவது போல் தற்போது அடையாள அட்டையினையும் NFC தொழில்நுட்பமூடாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.