Paristamil Navigation Paristamil advert login

அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு மூளை வளர்ச்சி அதிகரிக்கும் - ஆய்வு தகவல்

அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு மூளை வளர்ச்சி அதிகரிக்கும் - ஆய்வு தகவல்

30 மார்கழி 2021 வியாழன் 11:24 | பார்வைகள் : 9417


 பாலியல் உறவு பற்றி பல்வேறு மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. உடல் உறவு என்பது குழந்தை பெற்றுக்கொள்வதற்காக என்பதைத் தாண்டி, பல நன்மைகளை வழங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு மருத்துவ ஆய்வில், பெண்களின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாடுக்கும், பாலியல் உறவுக்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது. அடிக்கடி, கலவியில் ஈடுபடும் பெண்களுக்கு மூளை வளர்ச்சி அதிகமாகக் காணப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

 
ஜெனிட்டல் ஸ்டிமுலேஷனுக்கு அதிக இடம் இருக்கும் போது, பெண்களை தொடுவதற்கு மிகவும் சென்சிட்டிவ்வாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அதே போல, நன்றாக வளர்ச்சியடையும் மூளை, பிறப்புறுப்பு தூண்டப்படும் போது, அதிக உடலுறவுக்கு வழிவகுக்குமா அல்லது அதிகமாக உடலுறவு கொள்ளும் போது, மூளையின் பகுதி தசைகளைப் போல விரிவடையுமா என்பதையும் பற்றி ஆய்வுகள் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த ஆய்வு, பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் குறைபாடு உள்ள பெண்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும்.
 
மனிதர்களில், பெண்களின் பிறப்புறுப்பு எப்படி சொமடோசென்சரி கார்டெக்ஸ் இல் பிரதிபலிக்கிறது என்பதைப் பற்றி இன்னும் ஆய்வு செய்யப்படாமலே இருக்கிறது. உடலுறவு கொள்வதால், அது மாறக்கூடிய தன்மை கொண்டதா என்பதும் தெரியவில்லை, என்று ஆய்வு பேராசிரியர் கிறிஸ்டின் ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
 
சொமடோசென்சரி கார்டெக்ஸ் என்பது உடல் முழுவதும் ஏற்படும் உடல் ரீதியான உணர்வுகளை (சென்சரி) பெற்று, பிராசஸ் செய்கிறது. உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு வகையான கார்டெக்ஸ் உடன் தொடர்பு கொள்ளும். இது ஒரு மேப் போல கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், பெண்களின் பிறப்புறுப்பு, இதுவரை எந்த பகுதியுடன் தொடர்பு பெறுகிறது என்பது சவாலாகவே உள்ளது.
 
இதற்கு முந்தைய ஆய்வுகள், பாதம், இடுப்புப்பகுதி ஆகிய இடங்கள் சென்சரி கார்டெக்ஸ் உடன் தொடர்பு கொள்கிறது என்று வெளியிட்டது. ஆனால், பெண்களின் உடல் அல்லது பிறப்புறுப்பு எவ்வாறு தூண்டப்படுகிறது என்பது, உடலின் எந்த பாகங்கள் தொடப்படுவதால் பாலியல் உணர்வு தோன்றுகிறது, உள்ளிட்டவை வெவ்வேறாக இருப்பதால், இதன் முடிவுகள் தெளிவாக இல்லை.
 
JNeurosci என்ற ஜர்னலில், பின்வரும் விவரங்கள் கூறப்படவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 20 அடல்ட் பெண்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். பெண்கள் உடலுறவில் ஆர்கசம் அடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது வஜைனாவில் இருக்கும் கிளிட்டோரிஸ். ஆய்வில் கலந்து கொண்ட பெண்களின் கிளிடோரிஸ் பகுதியை ஸ்டிமுலேட் செய்து, அதனால் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஃபன்க்ஷனல் MRI மூலம் மூளை ஸ்கேன் செய்யப்பட்டது.
 
கிளிட்டோரிஸ் தூண்டலுக்கு, ஒரு சிறிய சாதனம் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் 10 நொடிகள் வைப்ரேஷன் மற்றும் 10 நொடிகள் ஓய்வு என்ற அடிப்படையில் எட்டு முறை ஸ்டிமுலேஷன் மேற்கொள்ளப்பட்டது. அதே சாதனம், வலது கையின் பின்புறத்தில் கண்ட்ரோலாகப் பயன்படுத்தப்பட்டது. அதன்படி, பெண்களின் பிறப்புறுப்பில் சென்சரி கார்டெக்ஸ், ஆண்களைப் போலவே, அவர்களின் இடுப்புப் பகுதியுடன் தொடர்பு கொண்டுள்ளது என்று அறிய வந்துள்ளது.
 
ஆய்வில் கலந்து கொண்ட 20 பெண்களிடமும், கடந்த ஆண்டில் அவர்கள் எவ்வளவு முறை பாலுறவு கொண்டார்கள் மற்றும் அவர்களின் பாலியல் வாழ்க்கைப் பற்றிய கேள்விகளும் கேட்கப்பட்டன. பின்னர், தூண்டுதலின் போது மூளையில் அதிகமாக ஆக்டிவாக காணப்பட்ட 10 இடங்களையும், அது எவ்வளவு தடிமனாக இருக்கிறது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். பிறப்புறுப்பு, எத்தனை முறை பாலியல் உறவில் ஒரு ஈடுபடுகிறார் மற்றும் தனித்தனியாக வரைபடப்படுத்தப்பட்ட பிறப்புறுப்பின் தடிமன் ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பை கண்டறிந்ததாக என்று ஆய்வாளர் கூறினார்.
 
அதிக செக்ஸ், அதாவது அதிகமான உடலுறவு கொண்டால், மூளை அதிகமாக வளர்ச்சியடையும். மூளை பிளாஸ்டிசிட்டி என்பதன் மூலம், மூளையின் சில குறிப்பிட்ட பாகங்கள் பயன்படுத்தப்படுவதால், அவை பெரிதாகின்றன என்பது இந்த ஆய்வின் வழியே நிறுவப்பட்டுள்ளது.அது மட்டுமின்றி, மோசமான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களின் பிரப்புருப்புடன் தொடர்புடைய மூளையின் பகுதி மெலிந்து இருப்பதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்