புரிந்து கொள்ளும் காலம்தான் வாழ்க்கையின் வசந்தகாலம்.....
17 மார்கழி 2021 வெள்ளி 08:17 | பார்வைகள் : 9736
கணவன் மனைவி உறவு என்பது இன்று பல இடங்களில் ஒற்றுமை இல்லாமல் பிரிவுகளே ஏற்பட்டு வருகின்றது. விட்டுக்கொடுத்தல் இல்லாத வாழ்க்கை தான் பிரிவிற்கும், சண்டைக்கும் காரணமாக அமைகின்றது.
கணவன் பால் எனில் அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி.
பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும், தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை. பாலை தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை.
தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதை தாங்காத முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும்.
பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.
ஒரு வேளை அப்படி தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி ஊற்றி அடுப்பையே அணைத்துவிடும்.
கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.
புரிந்து கொள்ளும் காலம்தான் வாழ்க்கையின் வசந்தகாலம்.....
எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு...