Paristamil Navigation Paristamil advert login

பெண்கள் பற்றிய சுவாரசியமான உண்மைகள்

பெண்கள் பற்றிய சுவாரசியமான உண்மைகள்

15 கார்த்திகை 2021 திங்கள் 10:34 | பார்வைகள் : 9445


பெண்கள் தனக்கான உடையைத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே, வாழ்நாளில் சுமார் ஒரு வருட காலத்தைச் செலவழிக்கின்றனர்.

 
ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் படைத்தவர்கள் பெண்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தங்களது இரண்டு காதுகளால் ஒரே நேரத்தில் வெவ்வேறு விஷயங்களைக் கேட்டு உள்வாங்கும் திறனும் பெண்களுக்கு உண்டு.
 
 
ஆண்களை விட, குறைவாகவே பெண்கள் பொய் பேசுவார்கள். தான் பேசுவது பொய் என்று பிறர் கண்டுபிடிக்காதவண்ணம், உண்மைபோலவே பேசும் திறமை பெண்களிடம் உள்ளது. மேலும் மற்றவர்கள் பேசும் பொய்யை எளிதாக கண்டுபிடிக்கும் திறனும் அவர்களுக்கு உண்டு.
 
நுகரும் திறன் பெண்களுக்கு, ஆண்களை விட சற்று கூடுதலாகவே இருக்கும். வண்ணங்களைப் பிரித்துப் பார்க்கும் திறனும் பெண்களுக்கு ஆண்களை விட 20 சதவீதம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஆண்களை விட பெண்களால் அதிக நிறங்களைப் பார்க்க முடியும்.
 
ஆண்கள் ஒரு நாளுக்கு 5000 முதல் 7000 வார்த்தைகள் வரை பேசுவார்கள். பெண்கள் ஒரு நாளுக்கு 20,000 வார்த்தைகள் வரை பேசுவார்கள். பெண்
களுக்கு, தான் பேசுவதை பிறர் கேட்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
 
பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து. உண்மையில் மனதளவில் மட்டுமின்றி, உடல் அளவிலும் பெண்கள் பலமிக்கவர்கள். வலியை தாங்கும் சக்தி ஆண்களை விட, பெண்களுக்கு அதிகமாக உள்ளது.
 
உதட்டுச்சாயம் பயன்படுத்தும்போது நம்மை அறியாமல் அதை விழுங்க நேரிடும். அந்தவகையில் நாள் தோறும் உதட்டுச் சாயம் பயன்படுத்துவதன் மூலம், தன் வாழ்நாளில் பெண்கள் உட்கொள்ளும் உதட்டுச் சாயத்தின் அளவு மட்டுமே 5 கிலோவுக்கும் அதிகமாம்.
 
சிறு சிறு பிரச்சினைகளுக்குக்கூட பெண்கள் அதிகமாக கவலைப்படுவார்கள். அதேசமயம் அவர்களால் கவலைகளில் இருந்து சீக்கிரமே மீண்டு வர இயலும். அதுமட்டுமல்லாமல் பிரச்சினைக்கானத் தீர்வையும் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.
 
பெண்கள் அதிகமாக அழுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. வருடத்திற்கு 30 முதல் 60 முறை பெண்கள் அழுகின்றனர்.
 
சுற்றி இருப்பவர்களைத் திருப்திப்படுத்தவும், மற்றவர்களின் கருத்துக்களை கேட்டு தன்னை சரிபடுத்திக்கொள்ளவும் பெண்கள் விரும்புவார்கள். முக்கியமாக ஆடை அலங்கார விஷயத்தில் மற்றவர்களின் கருத்தை கவனமுடன் கேட்பதில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள்.
 
தனது கோபத்தைப் பெரும்பாலும் உணர்ச்சிகள் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் பெண்கள் வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் கோபத்தை செயல் வடிவத்தில் வெளிப்படுத்துவார்கள்.
 
பெண்கள் அழுவதற்குப் பெரிதாக எந்த காரணமும் தேவை இல்லை. பெரும்பாலான பெண்கள் மற்றவர்கள் அழுவதை பார்த்தாலே, அழுது விடுபவர்களாக இருப்பார்கள்.
 
ஆண்களை விட பெண்களே இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்