உறவுகளில் ஏற்படும் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?
29 ஐப்பசி 2021 வெள்ளி 12:20 | பார்வைகள் : 8971
உறவில் சரியான புரிந்து கொள்ளாதது தான் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் ஆணி வேர் ஆகும். மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் இதிலிருந்து மீள அவர்களுக்கு சில நாட்களோ, வாரங்களோ, மாதங்களோ, வருடங்களோ தேவைப்படலாம்.
இன்றைய காலத்தில் மக்கள் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை உறவுகளில் உள்ள பிரச்சினை என்று சொல்லலாம். உறவுகளில் புரிந்துணர்வு இல்லாதது, அதிக எதிர்பார்ப்புகள், தேவையில்லாத சண்டைகள், கருத்து வேறுபாடு என பல்வேறு பிரச்சினைகள் உண்டாகிறது. இத்தகைய பிரச்சினைகள் இருவருக்கு இடையில் தான் பெரும்பாலும் நடக்கின்றது.
இரண்டு பேருக்கு இடையேயான உறவில், இருவரும் அதிகப்படியான எதிர்பார்ப்புகளையும், உணர்ச்சிகளையும் சமாளிக்க வேண்டியள்ளது. ஒருவர் எதிர்பார்ப்பை இன்னொருவர் பூர்த்தி செய்யாத போது, உறவில் பிரச்சினைகள் எழத் தொடங்குகின்றது. ஏமாற்றம் அடைந்தவர்கள் இதனால் சண்டைகளில் ஈடுபடுகிறார்கள். தேவையற்ற குற்றசாட்டுகளை கூறி உறவில் விரிசல் உருவாகிறது. இத்தகைய சூழல் இருவரையும் விவாகரத்து வரை கொண்டு செல்கிறது.
உறவில் சரியான புரிந்து கொள்ளாதது தான் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் ஆணி வேர் ஆகும். மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் இதிலிருந்து மீள அவர்களுக்கு சில நாட்களோ, வாரங்களோ, மாதங்களோ, வருடங்களோ தேவைப்படலாம். இது ஆண்,பெண் என்ற இனப்பாகுபாடு இல்லாமல், அனைவரிடத்திலும் மன ரீதியிலான தாக்கம் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவது எளிது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தவறான சூழ்நிலையில் இருந்து அவர்களை வெளியே வந்து, தன் மேல் உள்ள தவறை ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மன ரீதியிலான தாக்கத்தில் இருந்து வெளியே வருவது சிரமமானது. உறவுகளில் ஏற்படும் இந்த பிரச்சினைகளில் இருந்து வெளியே எவ்வாறு வருவது பற்றி உளவியல் நிபுணர்கள் பலரும் பல்வேறு வழிமுறைகளை கூறுகின்றனர். இங்கு நாம் மறைந்த விஞ்ஞானி மற்றும் உளவியல் நிபுணரான டாக்டர் காஜல் முக்ராய் கூறியவற்றை பார்க்கலாம்.
முதலில் தியானம் செய்ய தொடங்க வேண்டும். ஆரம்பிக்கும் போது கடினமாக தான் இருக்கும். பிறகு 5 நிமிடத்தில் இருந்து மணி கணக்கில் வரை கூட தியானத்தில் ஈடுபடலாம். தியானத்தில் முக்கியமான விஷயம் மூச்சில் கவனம் செலுத்துவது ஆகும். தொடர்ந்து தியானம் செய்யும் போது நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் விடுபடுவதோடு, நல்ல நேர்மறையான எண்ணங்கள் தோன்றும்.
நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்வது அவசியம் ஆகும். உதாரணமாக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் வாழ்க்கையில் முன்னேறுவேன்.என்னால் முடியும் என்று சொல்லலாம். நேர்மறை உறுதிமொழிகளை நமக்கு நாமே சொல்லும் போது, நம் உடலில் பாசிட்டிவ் எண்ணங்கள் எழ தொடங்கும். எனவே எந்த பிரச்னை வந்தாலும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.
மன்னிப்பு வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும். நீங்கள் ஒருவரை மன்னித்தால் மட்டுமே உங்களால் எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வாழ முடியும். மன்னிப்பு கேட்காமல், வீண் பிடிவாதத்தோடு இருந்தால் ஒரு சமயத்தில் அது நம் வாழ்க்கையையே அழித்து விடும். பிறரின் மீது தவறு இருந்தால் கூட நீங்கள் மன்னிப்பு கேட்டு விட்டு, அந்த இடத்தில் இருந்து வந்து விட வேண்டும்.அது உங்களை நேர்மறையான பாசிட்டிவ் சிந்தனை உள்ள மனிதராக மாற்றும்.
உங்களுக்கு பிடித்த செயல்களில் கவனத்தை செலுத்த வேண்டும். பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, ஊர் சுற்றுவது, புத்தகம் படிப்பது என எந்தவொரு செயலாகவும் இருக்கலாம். உங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதால் உங்களின் மனநிலை சரியான திசையை நோக்கி இருக்கும். அது உங்களை வாழ்க்கையின் வெற்றியின் பாதைக்கு அழைத்து செல்லும் என்கின்றனர்.