Paristamil Navigation Paristamil advert login

திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வது சரியா? தவறா ?

திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வது சரியா? தவறா ?

25 ஐப்பசி 2021 திங்கள் 12:41 | பார்வைகள் : 9148


 செக்ஸ் என்பது ஒரு உறவில் அல்லது திருமண வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் கணவன் மனைவிக்குள் ஒரு கெமிஸ்ட்ரியை உருவாக்குவதே செக்ஸ் வாழ்க்கைதான். அது திருப்தியாக இல்லாதபட்சத்தில் உங்கள் வாழ்க்கை போலியானது. உங்கள் எதிர்கால கணவருடன் உடலுறவில் நிறைவான திருப்தியைப் பெற வேண்டும். ஏனெனில் செக்ஸ் என்பது தினசரி நாம் தண்ணீர் குடிப்பது போல், உணவு அருந்துவதுபோல் அல்ல. அது உடலைத் தாண்டிய உணர்ச்சிப் பூர்வமான தேவை. அது நம் அளவற்ற காதலின் வெளிப்பாடு. எனவே திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது தவறான விஷயம் அல்ல. அதேசமயம் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ளும் நபருடன் நீண்ட நாட்கள் வாழ நினைக்கிறீர்கள்..அந்த உறவை திருமணம் வரை கொண்டு செல்ல நினைக்கிறீர்கள் எனில் மகிழ்ச்சி.

 
அதேபோல் திருமண உறவில் உடலுறவு என்பது முழுமையான மகிழ்ச்சியைத் தர வேண்டும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு அதுவும் அவசியம். பல திருமணங்கள் முறிவதற்கு உடலுறவு திருப்தியின்மையும் ஒரு காரணமாக இருக்கிறது.
 
நம் கலாச்சாரத்தைப் பொருத்தவரை திருமணம் வரை ஒரு பெண் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் வழக்கம். அவளை திருமணம் செய்யும் கணவன் தான் முதல் ஆணாக அவளை தொட வேண்டும் என்பதுதான் கூற்று. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதன் சாத்தியங்கள் என்றைக்கோ களைந்துவிட்டன. படுக்கையில் கூட ஆண் ஆக்டிவாகவும், பெண் அவனுக்கு இனங்கியும் இருக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் அவை என்றைக்கோ மாறிவிட்டன. இன்று கணவனும் மனைவியும் இணைந்து புதுப்புது செக்ஸ் நிலைகளை கண்டுபிடிக்கின்றனர். அதை எப்படியெல்லாம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு செய்யலாம் என சிந்திக்கின்றனர்.
 
எனவே உங்கள் எதிர்காலக் கணவர் பகுத்தறிவு கொண்ட ஆண் எனில் அவர் உங்கள் சூழ்நிலையை புரிந்துகொள்ளக் கூடும். உங்கள் திருமண வாழ்க்கையும் பாதிக்காது. அதோடு திருப்தியான செக்ஸ் வாழ்க்கை உங்கள் நெருக்கத்தை அதிகரிக்கும். ஆனால் உங்களை நீங்களே நேர்மையாக கேட்டுக்கொள்ளுங்கள்...அவரை நீங்கள் உண்மையில் நேசிக்கிறீர்களா என...அவரை நேர்மையாக காதலிக்கிறீர்களா என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அதேபோல் அவரும் உங்களை நேசிக்கிறாரா என உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
 
ஒருவேளை அந்த நபர் குறுகிய மனப்பான்மை கொண்டவராக இருந்தால், திருமணக் கலாச்சாரம், பழக்க வழக்கங்களை மதிக்கக் கூடிய , நம்பக்கூடிய நபராக இருந்தால் திருமணத்திற்கு முந்தைய உடலுறவை தவறாக நினைக்கக் கூடும். உங்கள் குணம், ஒழுக்கத்தை தவறாக பேசக்கூடும். சந்தேகப்படக் கூடும். இப்படி இருப்பின் அந்த நபரை நிச்சயம் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா..? அவருக்கு ’நோ‘ சொல்ல இதுவே சரியான தருணம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்