கணவருக்கு செக்ஸ் மூடே இருப்பதில்லையா..? அவரை உங்கள் வசம் கொண்டு வர..

20 புரட்டாசி 2021 திங்கள் 16:30 | பார்வைகள் : 13868
ஆண்கள் எப்போது மூடாக இருப்பார்கள், அவர்களுக்கு பெண்கள் ஒத்துழைக்க தயாராக இருக்க வேண்டும், பெண்களுக்கு திருமண ஆசை வந்துவிட்டாலே, அவர்களுக்கு செக்ஸ் ஆசை வந்துவிட்டது என நினைப்பது, இவையெல்லாம் ஒருவகையான கட்டுக்கதைகள்.
ஒருவருக்குள் இருக்கும் செக்ஸ் ஆசைகளை பொதுப்புத்தியில் இருந்து பார்ப்பது தவறு. இப்படியான பரவலான எண்ணதால், கணவரை அணுகும்போது சில பெண்களுக்கு ஏமாற்றம் மிஞ்சுகிறது. திருமணத்திற்கு பிறகு இத்தகைய ஏமாற்றத்தை நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது அவருக்கும் செக்ஸ் மீது அலாதி பிரியம் இருக்கிறது என்பதை உணர வைக்க வேண்டும். அதனை செய்துவிட்டால், உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறிவிடும்.
தலையில் மசாஜ் : உடலுறவு விளையாட்டில் தொடுதல் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலியல் ஆசை இல்லாத அவரிடம் சென்று, அந்த பகுதிகளை தொட்டு விளையாடும்போது பெரிதாக ஈர்ப்புகள் இல்லாமல் கூட போகலாம். அதற்கு பதிலாக, உணர்ச்சிமிக்க மற்ற பகுதிகளில் உங்களின் விளையாட்டுகளை அரங்கேற்றுங்கள். உதாரணமாக தலையை கோதிவிடலாம். அங்கு மசாஜ் செய்யும்போது அவர்கள் சொக்கிப்போகவும் வாய்ப்புள்ளது.
ஊர் சுற்றுங்கள் : திருமணமாகி நீண்ட வருடங்கள் கடக்கும்போது உடலுறவில் நாட்டமில்லாமல் போகலாம். பந்தத்தின் தொடக்கத்தில் இருந்த விருப்பம் போகபோக குறையும். அது உங்களுக்கு கவலையாக இருத்தால், புதுமையான இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். கடற்கரை மற்றும் ஹனிமூன் பிரதேசங்களாக சொல்லப்படும் இடங்களுக்குச் செல்லும்போது, இயல்பாக அவருக்குள் ஒரு மாற்றத்தை பார்க்கலாம். லேசான ஆடையுடன் அவர் முன் உலாவுங்கள். கிளாமராக உங்களை காட்டிக்கொள்ள முயற்சி செய்யதால், உங்கள் தூண்டிலில் அவர் சிக்குவார்.
உரையாடுதல் : உங்களுக்கு விருப்பம் இருப்பதுபோல் அவருக்கென்று சில விருப்பங்கள் இருக்கும். அதனை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இருவரும் கலந்துரையாடும்போது, இருவருக்குமான உணர்ச்சிகளை, எண்ண ஓட்டத்தை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பாக அமையும். அதற்கேற்க உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் வீணாகும்போது கோபம் ஏற்படும் என்பதால், அதனை தவிர்த்து நேரடியாக உரையாடுங்கள்.
பாராட்டு : நெருக்கம் தொடர வேண்டும் என நீங்கள் விரும்பினால், இருவருக்கும் இடையிலான உறவுநிலை மிகவும் சுமூகமாக இருக்க வேண்டும். அதற்கு, உங்கள் கணவர் செய்யும் செயல்களை மனதார பாராட்டுங்கள். அவரை ஒவ்வொரு விஷயத்திலும் ஊக்குவிக்கும்போது, அளவுக்கதிகமான பரிசத்தை பொழியும்போது, உறவுச் சிக்கல் இருக்காது.
ஈகோ வேண்டாம் : ஈகோ மோதல் இருப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உறவில் இது விரிசலை மட்டுமே ஏற்படுத்தும் என்பதால், நிச்சயம் ஈகோ இல்லாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். உங்களை தாழ்மையாக கருதிக்கொள்ள வேண்டாம். அழகானவளாக, புத்திசாலியாக நினைத்துக்கொள்ளுங்கள். உங்களின் துடிப்பான செயல்பாடுகள், கணவரை மிகவும் ஈர்க்கும். ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காது. இருவரும் சரிசமம் என்ற எண்ணத்தை அவருக்குள் உருவாக்கும்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1