Paristamil Navigation Paristamil advert login

ஆயுளை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள்!

ஆயுளை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள்!

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9567


 வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழ்வதற்கு, தினமும் உடற்பயிற்சிகளை செய்து வருவதோடு, ஒருசில உணவுகளையும் அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும்.

பசலைக்கீரை
 
பசலைக்கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக இருப்பதுடன், அதில் வைட்டமின்களும், இரும்புச்சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது.
 
மேலும் பசலைக்கீரையில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் லூடீன் அதிகம் உள்ளது. நார்ச்சத்து அதிகம் பசலைக்கீரையில் இருப்பதால், இரத்த அழுத்தம் சீராக இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும்.
 
க்ரீன் டீ
 
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் சி மற்றும் ஈ அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் உடலை ஆரோக்கியமாகவும், வயதாகும் தன்மையை தள்ளிப் போடும்.
 
அதுமட்டுமின்றி, க்ரீன் டீ இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, புற்றுநோயின் அபாயத்தில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும். ஆகவே பால் டீ குடிப்பதற்கு பதிலாக க்ரீன் டீயை அன்றாடம் பருகி வந்தால், உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
 
மீன்
 
மீனில் உடலுக்கு வேண்டிய புரோட்டீன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. ஆகவே அசைவ உணவு சாப்பிட நினைப்பவர்கள் மீனை தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது.
 
அதிலும் மீனில் சால்மனில் புரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் பி போன்றவை அதிகமாக உள்ளது. இதனை உட்கொண்டு வந்தால் நாள்பட்ட மூட்டு வலி மற்றும் ஞாபக மறதி போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
 
தேங்காய்
 
தேங்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. தினமும் உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர் ஒரு டம்ளர் தேங்காய் அல்லது இளநீரைக் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
 
மேலும் சமைக்கும் போது, உணவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், இதயம் ஆரோக்கியமாக செயல்படும். மேலும் இந்த எண்ணெயில் உள்ள மிகவும் ஸ்பெஷலான ட்ரைகிளிசரைடு செயின் மூளையை சுறுசுறுப்புடன் செயல்பட உதவிப்புரியும்.
 
அதுமட்டுமின்றி, இந்த எண்ணெயில் உள்ள லாரிக் ஆசிட் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.
 
தயிர்
 
தயிரில் புரோட்டீன், கால்சியம் அதிகம் இருப்பதால், இது எலும்புகளை வலிமை அடையச் செய்வதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் தடுக்கும்.
 
மேலும் தயிர் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதோடு, இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும்.
 
டார்க் சொக்லெட்
 
இதயம், மூளை போன்றவற்றை சீராக இயங்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன.
 
மேலும் இதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும். இரத்தம் உறைதல் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது போன்றவற்றையும் டார்க் சாக்லெட் தடுக்கும்.
 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்