திருமண வாழ்க்கையில் தாம்பத்ய உறவு இல்லை என்றால் என்ன ஆகும்..?
8 ஆடி 2022 வெள்ளி 17:51 | பார்வைகள் : 13928
திருமண வாழ்க்கை என்பது வெறுமனே சொத்து, பணம் போன்றவற்றை ஆணும், பெண்ணும் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தமாக இருக்க முடியாது. அதேபோல சந்ததியை விரிவாக்கம் செய்வதற்கான ஒன்றிரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்வதோடு திருமண வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தம் கிடைத்துவிடுவதில்லை.
ஒரு ஆணும், பெண்ணும் வாழ்நாள் முழுக்க மனமும், உடலும் இணை சேர்ந்து பேரின்பம் அனுபவிப்பதற்கான திறவுகோளாக இருப்பதுதான் திருமண வாழ்க்கை ஆகும். கணவனும், மனைவியும் மனப்பூர்வமாக இணைந்து வாழுகின்றனர் என்றால், அங்கு இரு உடல்களும் காந்தம் போல தானாகவே ஒட்டிக் கொள்ளும். அதுவே, மனக்கசப்புகள் ஏற்படுமாயின் அது தாம்பத்ய வாழ்க்கையிலும் எதிரொலிக்க தொடங்கும். அத்தகைய தருணத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பின்விளைவுகள் இவை தான்.
கோபம் அதிகரிக்கும் : கணவன், மனைவி இடையே தாம்பத்ய உறவு இல்லை என்றால் மன ஒற்றுமை உடைய தொடங்கும். எதெற்கெடுத்தாலும் இருவரும் கோபம் கொள்வார்கள். மனம் மகிழ்ச்சியான நிலையில் இல்லை என்பதால் தேவையற்ற வாக்குவாதங்கள் நடைபெறுவது இயல்பாகிவிடும்.
மன அழுத்தம் : மெத்தையில் கணவன், மனைவி இடையே இடைவெளி ஏற்பட்டால் அதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும். தம்பதியர்களின் மன நலனை இது வெகுவாகப் பாதிக்கும்.
தகவல் தொடர்பு பாதிக்கும் : தாம்பத்ய உறவை தவிர்க்குமோது தம்பதியர்கள் இடையிலான தகவல் தொடர்பு பாதிக்கப்படும். ஒருவருக்கு, ஒருவர் மனம் விட்டு பேச மாட்டார்கள். தங்கள் மகிழ்ச்சி அல்லது சோகம் என எதுவானாலும் தனக்குள்ளே பூட்டி வைத்துக் கொள்வார்கள். அதை வெளிப்படுத்த மாட்டார்கள்.
ங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ஹ்டீர்கள் என்றால் அவர்களது மன உறுதி பாதிக்கப்படும். வாழ்க்கையில் வெறுப்புணர்ச்சி மேலோங்கும்.
தன்னிம்பிக்கை உடைபடும் : கணவனோ அல்லது மனைவியோ பாலியல் உறவு வைத்துக் கொள்ள விருப்பப்பட்டு, உங்களை அணுகி வரும்போது நீங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ஹ்டீர்கள் என்றால் அவர்களது மன உறுதி பாதிக்கப்படும். வாழ்க்கையில் வெறுப்புணர்ச்சி மேலோங்கும்.
தூக்கமின்மை : எந்தவொரு தம்பதியரும் நல்ல திருப்திகரமான செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால், அதைத் தொடர்ந்து நிம்மதியாக நீண்ட நேரம் தூங்குவார்கள். ஆனால், அதுவே தாம்பத்ய உறவு இல்லையென்றால் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.
சமூக ஊடகங்களில் மூழ்கி விடுவது : தங்கள் பாலியல் தேவை பூர்த்தி ஆகாத விரக்தியில் சமூக ஊடகங்களில் முன், பின் தெரியாத நபர்களிடம் கொஞ்சம் வழிந்து பேச தொடங்கி விடுவார்கள். சிலர் ஒருபடி மேலே போய் நேரடியாக டேட்டிங் ஆப்களில் ஆள் பிடிக்கத் தொடங்கி விடுவார்கள்.
செக்ஸ் படங்கள் பார்ப்பது : பாலியல் ஆசைகளை தணித்துக் கொள்ள எப்போதாவது பார்ன் படங்கள் என்னும் செக்ஸ் படங்களை பார்க்க ஆரம்பித்து, பின்னர் அதுவே பழக்கமாகிவிடும்.
திருமணம் கடந்த உறவு : செக்ஸ் தேவைகள் பூர்த்தி அடையாமல், நாள் கணக்கில் ஏங்கி, தவிக்கிறவர்கள் ஒரு கட்டத்தில் திருமணம் கடந்த பந்தத்தை உருவாக்கிக் கொள்வார்கள். மெத்தையில் தாங்கள் நினைத்தது கிடைக்கவில்லை என்றால், வெளியிடங்களில் அதை நிறைவேற்றி கொள்ள நினைப்பார்கள்.
விவகாரத்து எண்ணம் மேலோங்கும் : ஒரு ஆணும், பெண்ணும் மண வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமே தாம்பத்ய வாழ்க்கை தான். அது இல்லை என்றாகிவிட்டால் இணைந்து வாழ விருப்பம் இல்லாமல் விவாகரத்து குறித்து சிந்திக்க தொடங்கிவிடுவார்கள்.