மணவாழ்க்கை பிடிக்காத நிலையில் என்ன செய்யலாம்?
12 சித்திரை 2022 செவ்வாய் 14:03 | பார்வைகள் : 9570
அனைத்து தம்பதியருமே வாழ்க்கையின் தொடக்க காலத்தை மகிழ்ச்சியுடன் தான் தொடங்குகின்றனர். இடைப்பட்ட வாழ்வில் அவ்வபோது கசப்புகள் வந்து போனாலும் கூட, அதை தாண்டி வாழ்நாள் இறுதி வரையிலும் ஒற்றுமையாக இருக்கின்றனர். குறிப்பாக, வாழ்க்கையை தொடங்கும் போது, “இறுதி வரை மகிழ்ச்சியாக இருப்போம்’’ என்ற உறுதி மொழியுடன் தான் தொடங்குகிறது. ஆனால், பல சந்தர்ப்பங்களில் இந்த வாக்குறுதியை பலரால் காப்பாற்ற முடியவில்லை.
மணவாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டதுமே விவகாரத்து பெற்று பிரிந்து விடலாமா அல்லது சகிப்புத்தன்மையோடு சேர்ந்து வாழலாமா என்ற குழப்பம் வந்து விடும். குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலமும் இதில் அடங்கி இருப்பதால், இந்த விஷயத்தில் முடிவு எடுக்க முடியாமல் தம்பதியர் திணறக் கூடும்.
ஆக, நிம்மதி இல்லாத மண வாழ்க்கையில் தம்பதியர் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடை காண்பது சற்று சிக்கலுக்கு உரிய விஷயம் தான். கணவன், மனைவியின் எண்ண ஓட்டங்கள் என்ன, திருமணத்தின் நிலை என்ன, குழந்தைகளுக்கு இது எத்தகைய சூழ்நிலையை உருவாக்கும் என்பதைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டியுள்ளது.