உண்மையில் காதல் உணர்வு எப்படி இருக்கும்..?
14 மாசி 2022 திங்கள் 09:06 | பார்வைகள் : 10339
இன்றைய இளைஞர்களின் உறவு முறையில் பொதுவாகப் பயன்படுத்தக்கூடிய வார்த்தை காதல். அதேசமயம் காதலுக்கு இணையாக காமம் என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது என்றால் மிகையல்ல.
ஆனால் இன்றைய இளைஞர்களின் பிரச்னை என்னவெனில் காதலும் காமமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக ஒரே நேர்கோட்டில் பார்ப்பதுதான். காதலில் வெளிப்படும் ரொமான்ஸ் உணர்ச்சிகளை காதலா, காமமா என பிரித்துப் பார்க்கத் தெரியாத வகையில்தான் இன்றை நவீன உறவுகள் இருக்கின்றன. எனவே இரண்டையும் விரிவாக அலசி தெளிவுபடுத்துகிறார் பாலியல் சார்ந்து எழுதும் கட்டுரையாளர் பூஜா பிரியம்வதா. இவர் ரெட்வாம் என்கிற ஆன்லைன் தளத்தில் உறவுகளில் மக்களுக்கு அவசியமான அதேசமயம் பேசத் தயங்கும் விஷயங்களை தெளிவுபடுத்தும் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
உண்மையிலேயே காதல், காமம் என்பது சில நேரங்களில் இருவருக்கும் தோன்றலாம். சில நேரங்களில் தனியாகவும் அல்லது இல்லாமலும் போகலாம். இப்படி அதன் கோணம் பல கலவையாக இருக்கலாம்.
உடல் சார்ந்த ஈர்ப்பு என்பது வயதைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. அதேபோல் காமம் என்பதும் வேறுபடுகிறது. ஹார்மோன் தாக்கத்தால் உண்டாகும் காம உணர்ச்சி, ஒருவரைப் பார்க்கும் போதோ அல்லது கற்பனையாகவோ உடல் சார்ந்து ஈர்க்கப்படுகிறது. அதேசமயம் அவர்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போது அவைக் காணாமல் போகக் கூடும்.
”என் கல்லூரியில் மிகவும் அழகான ஆசிரியை இருக்கிறார். அவர் திருமணமானவர். கணவரோடு மகிழ்ச்சியாக வாழ்கிறார். ஆனால் அவரை நான் பார்க்கும் ஒவ்வொரு தருணத்திலும் உடல் சார்ந்து ஈர்க்கப்படுகிறேன். இதில் உண்மை என்னவெனில் அவர் என்னுடைய ஆசிரியர். அதுவும் திருமணமானவர். எனக்கும் அழகான காதலி இருக்கிறாள். இருப்பினும் எனக்கு அவர் மீது உடல் சார்ந்த ஈர்ப்பு உண்டாகிறது. இத்தனைக்கும் என் காதலியுடன் திருப்தியான உடலுறவிலும் இருக்கிறேன். அனாலும் இதுபோன்ற உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ” என்கிறார் அலிகார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 23 வயது மாணவர் ரோஹன்.
இந்தியக் கலாச்சாரத்தில் காமம் என்ற வார்த்தையே கெட்ட வார்த்தையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பொதுவான உணர்ச்சி என்பதுதான் உண்மை. அது நம் வாழ்க்கையோடு ஒவ்வொரு நிலையிலும் வேறுபட்டு பயணிக்கும் உணர்ச்சி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அது தவறான விஷயமல்ல. அதற்காக யாரும் வருத்தப்பட வேண்டிய அவசியமும் இல்லை .
அதேபோல் காதலில் காமம், பாலியல் நெருக்கம் என்பதும் சாதாரண விஷயம்தான். சிலர் காமத்திற்கு அடிமையாகும் நிலையும் உண்டு என்கிறனர். உண்மைதான். இளமை பருவத்தில் காமம், பாலியல் உணர்ச்சி இருப்பது தவறில்லை. அதேசமயம் நீங்கள் பதின்பருவத்தை தாண்டியவர் எனில் பாலியல் உணர்ச்சியை பூர்த்தி செய்துகொள்ள பாதுகாப்பான உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமல்ல.
இருப்பினும் நீங்கள் உறவில் பாலியல் உணர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்துகிறீர்கள். உறவை பலப்படுத்த முயற்சி செய்யவில்லை எனில் நீங்கள் உறவில் புரிதல் இல்லாமல் இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். எனவே உறவுக்கும் காமத்திற்குமான புரிதல் அவசியம்
ஆண்கள் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத நான்கு மிக முக்கியமான ரகசியங்கள்
காதல் என்பது என்ன ?
ஒருவரைப் பார்த்ததும் உடல் திசுக்களில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரந்து சந்தோஷத்தை உண்டாக்குகிறது என்பதால் அவர் மீது காதல் இருக்கிறது என்று அர்த்தமில்லை. அதேசமயம் இந்த சினிமாக்களில் காட்டுவது போல் ஒருவரைப் பார்த்ததும் லைட் எரியும், மணி அடிக்கும் , இதயத் துடிப்பு அதிகரிக்கும். இதுபோன்ற உணர்வுகள் இருந்தால் காதல் என்று சொல்வதெல்லாம் முற்றிலும் முட்டாள் தனமான விஷயம்.
அப்படி அதைக் காதல் என்று உறுதி செய்துவிட்டால் அந்த காதலில் சாகும் வரை அர்ப்பணிப்போடு இருக்க வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும். அதாவது காதலில் உணர்ச்சிப்பூர்வமான இணைப்பு வேண்டும் என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் அதே உணர்ச்சி பூர்வமான இணைப்பில் காமம், ரொமான்ஸ், பாலியல் உணர்ச்சி , உடல் சார்ந்த ஈர்ப்பு ஆகியவையும் அவசியம் என்பதை புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர். அப்படியொரு எண்ணம் இருந்தால் அது குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இதில் காதலில் காமம் என்பது சரியா தவறா என்ற வாதமே முரணானது. இது சாதாரணமாக நிகழக்கூடிய, அந்த உறவை எதிர்காலத்திற்கு கொண்டு செல்லும் உறுதியான பிணைப்பு.
இதயமா? மூளையா? எது சொல்வதை நம்புவது?
ஒருவேளை ஒருவரைப் பார்க்கும் போது பாலியல் சார்ந்து மட்டுமே ஈர்ப்பு ஏற்படுகிறது எனில் அவர்களோடு மனம் சார்ந்த ஈர்ப்பு இல்லை என்றால் அது காதல் ஆகாது. அதேசமயம் காமத்தால் ஈர்க்கப்பட்டு அவருடனான உறவை பலப்படுத்த முயற்சிக்கிறீர்கள் எனில் காதல் சார்ந்தும் உறவாட நினைக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவேலை அவர்களுடன் காமம் மட்டுமே உண்டாகிறது எனில் காதல் இல்லை.
நாங்கள் இருவரும் இணைந்து கால் செண்டரில் பணியாற்றினோம். வேலைப் பளுவுக்கு இடையே உடலுறவுத் தேவையால் இருவரும் இணைந்து உடலுறவில் ஈடுபட்டோம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இருவருக்குள்ளும் மனதளவில் பிணைப்பு உண்டானது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முற்பட்டோம். தற்போது இருவரும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இணைந்துள்ளோம். அதேசமயம் தொழில் முணைவோர்களாவும் இணைந்துள்ளோம் என்கின்றனர் ராஜீவ் (26) மற்றும் ரீமா (25) ஜோடி.
காதல் காமம்
காதலில் உடலுறவு மட்டுமே முக்கியமல்ல. அதேபோல் காதலிக்கிறீர்கள் எனில் செக்ஸ்டிங் செய்வது பேசிக்கொள்வது மட்டுமே காதல் அல்ல. அதோடு எதிர்காலத் திட்டங்களையும் பேச வேண்டும். இருவரின் கேரியர் தொடர்பாகவும் பேச வேண்டும். இப்படி எல்லாமும் கலந்த பொறுப்புணர்வோடு செயல்படுவதும் அந்தக் காதலில் அவசியம். காதல் காமம் இரண்டையும் வேறுபடுத்துவது கடினம்தான். ஆனால் பொதுவான கருத்து என்னவெனில் காமம், பாலியல் ஈர்ப்பு என்பது கண நேரமே இருப்பது. சில நேரம் அது மங்கியும் போகலாம். காதல் முறிந்தால் காமமும் முறிந்து போகும். ஆனால், காதல் என்பது வாழ்க்கை முழுவதும் பயணிக்கிறது. இந்த காதல் பயணம் நீண்ட தூரம் சளிப்படையாமல் இருக்க இந்த கண நேரக் காமமும் அவசியம் “ என்கிறார் பூஜா.