அதிகாலை உடலுறவுவின் நன்மைகள் தெரியுமா.?
12 மாசி 2022 சனி 08:16 | பார்வைகள் : 9139
உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள புத்தகம் படித்தல், உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுவது என்பது நாம் அனைவரும் அறிந்த பொதுவான விஷயங்களாகும். இந்த பட்டியலை தவிர்த்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள அடிக்கடி உடலுறவு கொள்வது என்பது சிறந்த வழிமுறையாக ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அடிக்கடி உடலுறவு வைத்து கொள்ளும் போது மனஅழுத்தம் குறைகிறது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. அதுமட்டுமின்றி, முதுமையில் நோய் வருவதை தடுக்கிறது, நீண்ட ஆயுளைக் தருகிறது. மாதவிடாய்க்கு முன்பான PMS அறிகுறிகளைக் குறைத்தல் மற்றும் நல்ல தூக்கம் உள்ளிட்ட பயன்களைத் தரும். மேலும், இதயத்தை வலுப்படுத்தும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
குறிப்பாக, அதிகாலையில் உடலுறவு வைத்துக் கொள்ளும் தம்பதியினருக்கு, உடலுறவினால் மகிழ்ச்சிக்கான ஹார்மோனான டோபமைன் சுரக்கும் இது தூக்க சுழற்சியை சீராக்கும். சரியான நேரத்தில் தூங்குவது உடலை புத்துணர்வாக்கும். அந்த நாள் குதூகலமாக இருக்கும். இது உடனே மன அழுத்தத்தை போக்கி நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவுகிறதாம்.மேலும் இது உங்களது சமூக உறவை மேம்படுத்தும் உங்கள் பார்ட்னருடனான நெருக்கத்தையும் அதிகரிக்கும் என்கின்றனர்.
அதிகாலையில் உடலுறவு வைத்துக் கொள்வதால் ஏற்படும் பயன்கள்:
1. உங்கள் நாளைத் தொடங்குவதற்கும் உங்கள் துணைக்கு பிணைப்பை அதிகரிப்பதற்கும் தேவையான அத்தனை ஹார்மோன்களும் சுரக்கும். உங்களது செக்ஸுக்கான தூண்டுதல் நோர்பைனெப்ரைன் என்கிற ஹார்மோனைச் சுரக்கச் செய்கிறது. அது நம் இதயத்திலிருந்து பிறப்புறுப்புகளுக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மேலும் கட்டியணைக்கத் தூண்டும் ஹார்மோனான ஆக்ஸிடோசினையும் சுரக்கச் செய்கிறது.
2. உங்கள் நாளை ஆற்றலுடன், புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவுகிறது. அதனால் நாள் முழுவதும் முழு எனர்ஜியுடன் இருக்க உதவுகிறது.
3. உடலுறவின் போது நீங்கள் கவனத்துடன் இருக்க உதவுகிறது. நாள் முழுதும் பல்வேறு பணிகளில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு பல்வேறு சிந்தனைகள் இருக்கலாம். அத்தனைச் சிந்தனைகளையும் கொஞ்சம் தள்ளிவைத்து அந்த நொடியில் மட்டும் கவனம் செலுத்தும் இயல்பைக் கொண்டு வருகிறது.
4. உடலுறவு என்பது ஒருவகையில் உடற்பயிற்சி. உங்கள் உடலின் கலோரியைக் காலையிலேயே குறைக்க உடலுறவு உதவுகிறது. நீங்க உடலுறவில் தீவிரமாக இயங்கும்போது வியர்வை ஏற்பட்டு அதன் மூலமாக உங்கள் உடலின் தேவையற்ற கலோரிகளை அது குறைக்கிறது.
6. அதிகாலை மூளைச் சுறுசுறுப்பாக வேலை செய்யும் நிலையில் உடலுறவில் புதிய சில நுணுக்கங்களை இயல்பாகவே நடைமுறையில் கொண்டு வர உங்களுக்கு யோசனை தோன்றும். மேலும், உடலுறவு என்றாலே இரவில்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஒரு பழக்கத்தை இது மாற்றுகிறது.
இன்றைய நவீன கால கட்டத்தில் இதய நோய்க்கு உலகில் பெரும்பாலோனோர் பாதிக்கப்படுகின்றனர். இவை மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், பாலியல் செயல்பாடுகளின் குறைந்த ஈடுபாடு கொண்ட ஆண்களுக்கு, இருதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் பரிந்துரைத்தது.
மேலும், ஒரு மாதத்திற்கு ஒரு முறை உடலுறவி வைத்து கொள்ளும் நபர்களை காட்டிலும், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் உடலுறவு வைத்து கொள்ளும் நபர்களுக்கு மாரடைப்பு வருவது குறைவாக உள்ளது. இந்த ஆய்வானது, 65 வயதிற்குட்பட்ட 1,120 ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.