Paristamil Navigation Paristamil advert login

இப்படியும் டேட்டிங் செய்யலாம்

இப்படியும் டேட்டிங் செய்யலாம்

30 வைகாசி 2020 சனி 10:57 | பார்வைகள் : 11601


 இந்த கொரோனா லாக்டவுன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடத்தை சொல்லிக் கொடுத்து சென்று உள்ளது என்றே கூறலாம். அதிலும் காதல் ஜோடிகளுக்கு இடையே இந்த தனிமை ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. நிறைய தம்பதிகள் தங்கள் காதல் இரவை வெளியில் சுத்தாமல் அன்றாட நாளில் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருப்பதே நிறைய பேருக்கு தொந்தரவாக இருக்கிறது. சரி ஊரடங்கு காலத்தில் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே அழகாக டேட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
டேட்டிங் இரவு என்றாலே மெழுகுவர்த்தி இரவு என்பது கண்டிப்பாக இடம் பெறும். தினசரி வீட்டு வேலைகளை ஆபிஸ் வேலைகளை முடித்து விட்டு சோர்வாக படுக்கும் போது எப்படி தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகமாகும். இதுவே உங்க துணையுடன் ஒரு அழகான இரவை கழித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். இதற்காக வெளியே சென்று நிறைய மெனக்கெடல்களை எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சில மெழுகுவர்த்தி விளக்குகள் , குவளை மீது சில அழகான பூங்கொத்துகள், பிண்ணனியில் மென்மையான இசை போன்றவற்றை ஒலிபரப்ப வேண்டும். உங்க டேட்டிங் இரவை அழகாக்க இதை விட பெரிய விஷயம் கிடையாது. இந்த அழகான இரவு உங்க இருவரின் சுற்றுப்புறத்தையும், மனநிலையும் மாற்ற உதவும் .
 
 
நீங்கள் சோர்வாக இருக்கும் சமயங்களில் இருவரும் இணைந்து உங்களுக்கு பிடித்த காதல் திரைப்படங்களை பட்டியலிட்டு பார்த்து வரலாம். உங்க இரவு உணவை முடித்த பிறகு கூட இதை நீங்கள் செய்யலாம். இதை நீங்கள் இன்னும் சுவராஸ்யமாக்க விரும்பினால் காதல் காட்சிகளை தேர்ந்தெடுத்து இயற்றலாம். காதல் கதாநாயகன், நாயகியாக நீங்கள் மாறலாம்.
 
பல நாட்களாக வீட்டிற்குள்ளேயே இருப்பது உங்க சூழலை மோசமாக்கலாம். எனவே உங்க வீட்டு சூழலையே மாற்றுவது உங்களுக்கு புதுவித காதல் அனுபவத்தை வழங்க வாய்ப்பு உள்ளது. ஒரு கனமான கண்ணாடி குடுவையில் மலர்கள் இட்டு வாசனை மெழுகுவர்த்தி ஏற்றி, உங்களுக்கு பிடித்த காதல் மெலோடியை ஒலிக்க வைத்து சின்ன சின்ன மாற்றங்களை ஏற்படுத்தி உங்க காதலில் ஒரு அழகான மாற்றத்தை கொண்டு வரலாம்.
 

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    2

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்