தாம்பத்தியத்திற்கான சரியான நேரம்

16 தை 2020 வியாழன் 12:33 | பார்வைகள் : 12198
உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் உடலுறவில் ஈடுபடுகிறது. திருமணமான ஒவ்வொரு கணவன், மனைவியும் தாம்பத்தியம் என்று அழைக்கப்படும் உடலுறவில் ஈடுபடுகின்றனர்.
உடலுறவில் ஈடுபடுவது குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் எழுவது இயல்பு தான் அந்தவகையில் இந்த தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சரியான நேரம் எது என்பது குறித்த கேள்வி ஒரு சிலருக்கு எழலாம். அதற்கான பதிலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
காலை நேரத்தில் உண்மையில் நமது உடலானது சுறுப்பாக இருக்கும். காலை நேரம் தாம்பத்தியத்திற்காக உருவாக்கப்பட்டதாகும். டெஸ்டோஸ்டிரோன் மட்டுமின்றி காலை நேரத்தில் உங்கள் உடலின் ஆற்றல் மட்டமும் அதிகமாக இருக்கும்.
காலை நேர தாம்பத்தியம் உங்கள் உடலில் ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கும், இது நாள் முழுவதும் உங்களையும், உங்கள் துணையையும் பிணைப்புடனும், உற்சாகமாகவும் வைத்திருக்கும்.
குறிப்பாக காலை 7:30 மணியளவில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு மிகவும் சிறந்த நேரமென்று பாலியல்துறையை சேர்ந்த மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2