தினமும் தாம்பத்திய உறவு..! ஆண் - பெண்ணுக்கு ஏராளமான நன்மை!
31 மார்கழி 2019 செவ்வாய் 10:23 | பார்வைகள் : 9656
கணவன் - மனைவி இடையேயான தாம்பத்திய உறவு என்பது மிகவும் அழகான ஓன்று. தங்கள் சந்ததிகளை பெருக்குவதற்கு மட்டும் இல்லாமல் தாம்பத்திய உறவின் மூலம் பல்வேறு நன்மைகளும் கிடைக்கிறது.
இந்நிலையில் தாம்பத்திய உறவில் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆராய்ச்சி நிறுவனம் ஓன்று ஆராய்ச்சியில் இறங்கியது. அந்த ஆராய்ச்சியின் முடிவுப்படி, கணவன் - மனைவி உறவில் ஈடுபடுவதால் இருவருக்கும் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கிறது என தெரியவந்துள்ளது.
தினமும் உறவில் ஈடுபட்டால் சளி தொல்லை நீங்கும், முதுகு வலி குறையுமாம். உறவின் போது வெளிவரும் ஆக்சிடோசின் என்னும் கார்மோனானது நமது மூளையை சற்று ரிலாக்ஸ் செய்ய வைக்க உதவுகிறதாம். இதனால் டென்ஷன் குறையும்.
உறவில் ஈடுபடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியுமாம். மேலும், நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்க முடியுமாம். பெண்கள் தினமும் உறவு கொள்ளும் போது, உடலில் டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் முதலிய நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.
தினமும் தம்பதியா உறவு கொள்வதன் மூலம் பெண்களுக்கு இடுப்பு தசைக்கு உடற்பயிற்சி செய்தவாறு அமையும். தினமும் உடலுறவு செய்வதன் மூலம் கீழ் முதுகு தண்டில் ரிலாக்சேஷன் ஏற்படும்.