உடல் எடையை குறைக்கும் லிப் டு லிப் முத்தம்

17 மார்கழி 2019 செவ்வாய் 09:21 | பார்வைகள் : 13756
1. ஒருமுறை இதழில் முத்தம் கொடுக்கும் போது 2 முதல் 6 கலோரிகள் நம் உடலில் இருந்து கரைக்கப்படுகிறது. மிக ஈடுபாட்டுடன் கொடுக்கப்படும் முத்தத்தினால் ஒரு மணி நேரத்திற்கு 100 கலோரிகளை எரிக்கமுடியும். இது 20 நிமிட உடற்பயிற்சிக்கு சமமானதாகும். இதன் மூலமாக எளிய மற்றும் இனிய வழியில் உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.
2. லிப் டு லிப் முத்தம் குடுக்கும் போது 30க்கும் மேற்பட்ட முக தசைகளை தூண்டுகிறது. இது உங்கள் முகத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உண்டாவதை குறைக்கிறது. இதன் மூலம் உங்கள் முகம் இளமையாக தோற்றம் அளிக்கும்.
உடல் எடையை குறைக்கும் லிப் டு லிப் முத்தம்
3. இதழ் முத்தம் உங்கள் இரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. இது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
4. நீங்கள் முத்தமிடும் போது, உமிழ்நீர் உற்பத்தி உங்கள் வாயில் அதிகரிக்கிறது, இது பற்களில் உருவாகும் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி உங்கள் பற்கள் மீது உருவாகும் கேவிட்டிகளை குறைக்க உதவுகிறது.
5. ஜப்பானிய ஆராய்ச்சியின்படி, 30 நிமிட முத்தம் ஹிஸ்டமின் எனும் ரசாயனம் உடலில் உற்பத்தி ஆவதை குறைக்கிறது. இந்த ஹிஸ்டமின் எனும் ரசாயனம் தான் தும்மல், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்களில் நீர் வடிதல் காரணமான ஒன்று. எனவே தும்மலை முத்தம் கொடுத்தும் குறைக்கலாம்.
6. முத்தம் எண்டார்ஃபின் எனும் ரசாயனம் உடலில் உற்பத்தி ஆவதை அதிகரிக்கிறது, இந்த எண்டார்ஃபின் உங்களின் சந்தோஷமாக உணரவைக்கும் உணர்ச்சிகளின் வெளியீட்டை தூண்டும். பின்னர் நீங்கள் மகிழ்ச்சியாக உணரலாம்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1