செக்ஸ் இல்லாமல் வாழ முடியாதா ?
18 புரட்டாசி 2021 சனி 18:37 | பார்வைகள் : 8983
கண்டிப்புடன் சொல்கிறேன் செக்ஸ் ஒரு மனிதனுக்கு அடிப்படை அவசியம் இல்லை. இருப்பினும் பெரும்பாலான மக்களுக்கு செக்ஸ் என்பது வாழ்க்கையின் முக்கியமான விஷயமாகக் கருதுகின்றனர்.
அவர்களுடைய வாழ்க்கையும் அதனால்தான் சிறப்பாக இயங்குவதாக நினைக்கின்றனர். அதேசமயம் செக்ஸ் என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சில நன்மைகளை அளிக்கின்றது. குறிப்பாக நீண்ட ஆயுளை அளிக்கிறது.
இதய பாதிப்புகளை குறைக்கிறது. தன்னம்பிக்கை உருவாகிறது. இப்படி நிறைய நன்மைகளை அதனால் பெற முடிகிறது.அதேபோல் செக்ஸ் இல்லாத வாழ்க்கையிலும் சில நன்மைகளை நம்மால் பெற முடியும். அதாவது செக்ஸ் அல்லாத வாழ்க்கையில் சில விருப்பமான விஷயங்களைச் செய்ய மனம் ஈடுபடும். அதாவது நீங்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். மக்களுடன் எப்போதும் அன்புடன் நேர்மையான உறவில் இருப்பீர்கள். நீங்கள் ஒரு விளையாட்டு பயிற்சியில் ஈடுபடலாம். செல்லப்பிராணிகளை வளர்க்கலாம். ஆனால் செக்ஸில் ஈடுபட்டால் உங்கள் வாழ்க்கையை தரமாக மாற்ற அதுதான் ஒரே வழியாக இருக்கும்.
இன்னும் கேட்டால் பல பேர் உடலுறவு கொள்ளாமலே வாழ்கின்றனர். அவர்கள் குறைவான பாலியல் ஈர்ப்பு கொண்டவர்கள். இதற்குக் காரணம் நீங்கள் காதலிக்க தகுதியானவர் அல்ல என்பது அர்த்தம் கிடையாது. அதேபோல் நீங்கள் இயற்கைக்கு எதிரான மனிதரும் கிடையாது. பாலியல் ஈர்ப்பற்ற தன்மை என்பதும் இயற்கையான ஒரு விஷயம்தான். அதில் எந்த தவறும் கிடையாது. அதேபோல் எதிர் பாலினத்தை ஈர்க்க செக்ஸ் மட்டும்தான் ஒரே வழி கிடையாது. நீங்கள் ஒருவர் மீது கொண்ட பிணைப்பை , அன்பை உறுதியாக்க, வெளிப்படுத்தவும் செக்ஸ்தான் ஒரே வழி என்பதும் கிடையாது.
எனவே செக்ஸ் கலாச்சார அடிப்படையில் மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் ஒரு மனிதன் திருப்தியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ செக்ஸ் அடிப்படை தேவை கிடையாது.