Paristamil Navigation Paristamil advert login

காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா ?

காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா ?

29 ஆவணி 2021 ஞாயிறு 14:48 | பார்வைகள் : 9426


 உங்கள் நாளை புதியதாகவும், உற்சாகமாகவும் தொடங்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று காலை நேர செக்ஸ் (Morning Sex). பெரும்பாலான தம்பதியினர் இரவு நேரங்களில் மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்ள விரும்புவார்கள். ஏனெனில் அடுத்தநாள் வீட்டு வேலை செய்ய சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும் என்பதால் காலை நேர உடலுறவு செய்ய பெண்கள் அதிகம் விரும்பமாட்டார்கள்.

 
ஆனால் காலை நேர உடலுறவு உங்கள் மனநிலையை மேம்படுத்தலாம். அதேபோல உங்கள் ஆற்றலையும், நம்பிக்கையையும் அதிகரிக்கும். மேலும், அதிக செயல்திறனுடன் வேலை நாளை எளிதாக்க உதவுகிறது. இது உறவுக்கு மட்டுமல்ல, அன்றைய ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் நல்லது. அதன்படி காலை நேர உடலுறவின் சில சிறந்த நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
 
தம்பதியினர் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியாததற்கு மன அழுத்தம் ஒரு பெரிய காரணமாக இருக்கும். எனவே, மன அழுத்தத்தை குறைக்க மற்றும் அவர்களின் பாலியல் வாழ்க்கைக்கும் பயனளிக்கும் ஒரு செயலில் ஈடுபடுவது சிறந்த வழியாக இருக்கும். செக்ஸ் போன்ற இன்பமான செயல்கள் மன அழுத்த ஹார்மோன் அளவைக் குறைக்கும். மீதமுள்ள நாட்களில் நீங்கள் மகிழ்ச்சியாகவும், திறமையாகவும் இருப்பீர்கள்.
 
உங்கள் நாள் புத்துணர்ச்சியாக இருக்கும் (You’re ready for the day) : ஒருவர் காலையில் எழுந்ததும், அவரின் நாளை எதிர்கொள்ள தயாராக இருப்பார். எனவே, ஒருவர் உடலுறவில் ஈடுபடும் போது, அவரது உடல் உடனடியாக காலை செக்ஸ் வழக்கத்திற்கு ஏற்றதாக அமைகிறது. அந்த நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளும் உச்சத்தில் உள்ளன. எனவே, ஹார்மோன் அளவு அதிகமாக இருப்பதால், அந்த நாள் உங்களுக்கு அதிக ஆற்றல் மிக்கதாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். காலையில் உறவு கொள்ளும் போது நமது உடலில் ஆக்ஸிடோசின் எனப்படும் நல்ல ரசாயனம் ஒன்று வெளிப்படும். இது நம்மை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
 
காலையில் செக்ஸ் வைத்துக்கொள்வது கிட்டத்தட்ட ஒரு வொர்க்அவுட்டுக்கு சமமாக இருக்கும். இது ஒரு உடற்பயிற்சி கூடத்தில் வேலை செய்வது போலவே இருக்காது என்றாலும் நீங்கள் சில செயல்களைப் பெறுவீர்கள். அது உடலுக்கு ஆரோக்கியமானது. ஆராய்ச்சிகளின்படி, செக்ஸ் நிமிடத்திற்கு ஐந்து கலோரிகளை எரிக்கிறது. எனவே காலையில் உடலுறவு வைப்பதன் மூலம் பல கலோரிகளை குறைக்கலாம்.
 
உங்கள் மனநிலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் (Boosts your mood and immune system) : பொதுவாக நம் உடலில் வெளியாகும் எண்டோர்பின்கள், அதிகாலையில் நம் மனநிலையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நீங்கள் உடலுறவு செய்தவுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கூடுதலாக, பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக உங்கள் உடலின் பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்துவதன் மூலம் செக்ஸ் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
இளமையாக இருக்க உதவுகிறது (Helps you look younger) : உடலுறவின்போது ஆக்ஸிடாஸின், பீட்டா-எண்டோர்பின்கள் மற்றும் பிற ஹார்மோன்களை வெளியிடுவதால், காலை உடலுறவு நிச்சயமாக இளமையாக இருக்கும் தோற்றத்தை உங்களுக்கு கொடுக்கும். ஒரு கணக்கெடுப்பின்படி, வாரத்தில் மூன்று முறை உடலுறவு செய்யும் தம்பதிகள் குறைவான உடலுறவு கொண்டவர்களை விட மிகவும் இளமையாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செக்ஸ் இன்பத்தின் உச்ச நிலை, சருமத்திற்கு பல வழிகளில் பயனளிக்கிறது.
 
ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் : இதை சரி செய்தாலே போதும்
நேரத்தைப் பற்றிய கவலைப்பட வேண்டாம் (Don’t worry about the time) : தம்பதிகள் காலையில் உடலுறவு கொள்வது பற்றி மறுபரிசீலனை செய்ய விரும்பலாம். ஏனெனில் அதில் ஈடுபடுவது காலையில் தூக்கம் குறைவாக இருப்பதையோ அல்லது பிற்பகுதியில் சோர்வாக இருப்பதையோ குறிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், ஒருவர் தங்கள் காலை நேர அலாரங்களை நிறுத்தி வைக்கலாம். உடலுறவை இன்னும் உற்சாகமாக வைத்திருக்க ஸ்பூனிங் அல்லது மிஷனரி (spooning or missionary) போன்ற சாதாரண மற்றும் சோர்வு குறைந்த பாலியல் நிலைகளை நாடலாம்.
 
மேலும் காலை நேர உடலுறவு வைத்துக்கொளவதால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவது தடுக்கப்படுவதாகவும், சளி, காய்ச்சல் உள்ளிட நோய்கள் குணமடைகின்றன எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதோடு, கூந்தல், சருமம், நகம் ஆகியவை நன்றாக வளர்ச்சி அடையவும் அது உதவும் என கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்