Paristamil Navigation Paristamil advert login

திருமண வாழ்க்கை சலிப்பு தட்டிவிட்டதா..?

திருமண வாழ்க்கை சலிப்பு தட்டிவிட்டதா..?

18 புரட்டாசி 2021 சனி 18:39 | பார்வைகள் : 9334


உறவுகள் கொஞ்சம் சிக்கல் நிறைந்தவை தான். ஆனால் திருமண உறவில் சிக்கல் இருந்தால் அது வாழ்க்கையை மகிழ்ச்சியற்றதாக மாற்றி விடும். திருமண வாழ்வில் எல்லாமே சரியாக இருந்தால் அது ஒரு சிறிய மகிழ்ச்சியயை கூட பெரிதாக்கி வாழ்க்கையை பிரகாசிக்க செய்யும். திருமண வாழ்வில் நுழைந்த பிறகு அதில் ஆர்வம் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத உணர்வை ஏற்படுத்தி விட கூடும். பொதுவாக சுமைகள், பொறுப்புகள் மற்றும் ஒருவர் மீது ஒருவர் காதல் ஆர்வமின்றி இருப்பது உள்ளிட்டவை தம்பதியரின் பாலியல் வாழ்க்கையை பாதிக்க செய்கிறது.

 
ஒரு உறவில் உணர்வுகளுடன் ஒப்பிடும் போது பாலியல் ஆசை மற்றும் துணை மீதான ஆர்வம் இரண்டுமே சமமாக இருப்பது முக்கியம். இல்லாவிட்டால் திருமண உறவுக்குள் தேவையற்ற பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் எழும். நீங்களோ அல்லது உங்கள் லைஃப் பார்ட்னரோ ஒருவர் மீது ஒருவர் ஆர்வம் இல்லாமல் இருப்பது அல்லது திருமண உறவில் ஆர்வம் இல்லாமல் அதிருப்தியாக இருப்பதை குறிக்கும் சில விஷயங்களை காணலாம்.
 
தம்பதியருக்குள் நடக்கும் செக்ஸ் என்பது வெறும் கட்டுப்படுத்த முடியாத ஆர்வமிக்க உணர்ச்சி மட்டுமல்ல. முத்தம், தொடுதல், ஃபோர்ப்ளே ஆகியவை உடலுறவின் இன்றியமையாத விஷயங்கள். இவை இல்லாமல் தம்பதியருக்குள் உடலுறவு நடந்தால் அது வெறும் செக்ஸ் மட்டுமே. தம்பதியர் இருவரில் யாருக்கேனும் உடலுறவின் போது முத்தமிடுதல், கட்டிப்பிடித்தல் அல்லது போர்ப்ளே செய்வதில் விருப்பம் இல்லை என்றால் அவர்களது திருமண வாழ்வில் காதல் ஆர்வம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். எனவே செக்ஸ் என்பது வெறும் உடல் இச்சைக்காக மட்டுமல்ல துணை மீதான காதலை வெளிப்படுத்தும் முக்கிய வழி ஆகும்.
 
நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையும் வேலைக்கு செல்வதாலோ அல்லது உங்களுக்கான நேரத்தை குழந்தைகளுடன் அதிகம் செலவிட நேருவதாலோ திருமண உறவில் இருக்கும் ஆர்வம் மெதுவாக குறையத் தொடங்குகிறது. வேலைக்கு போய்விட்டு நீங்கள் வீடு திரும்பும் போது உங்கள் துணையை பார்த்தவுடன் நீங்கள் உற்சாகமடைந்தால் இன்னும் திருமண உறவில் உங்களுக்கு ஆர்வ மிச்சமிருக்கிறது என்று அர்த்தம். எனவே அதை அதிகரிக்க செய்யும் வழிகளை தேடுங்கள். ஆனால் துணையை பார்க்கும் போது உங்களுக்கு எவ்வித உற்சாகமோ அல்லது உணர்ச்சியோ இல்லை என்றால் உங்கள் திருமண வாழ்க்கையை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்.
 
உங்கள் பார்ட்னருடன் நீங்கள் நிதி இலக்குகள் மற்றும் வாழ்வின் அடுத்த கட்டத்தை பற்றிய எண்ணங்கள் மற்றும் திட்டங்களை ஷேர் செய்ய விரும்பாமல் அப்படியே நாட்களை கடத்தி கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்கள் துணை மீதான ஆர்வம் உங்களுக்கு குறைந்துவிட்டதை அது உணர்த்துகிறது. குறிப்பிடத்தக்க குறிக்கோள்கள் மற்றும் வாழ்க்கை லட்சியங்களை நீங்கள் உங்கள் பார்ட்னருடன் ஷேர் செய்து கொள்வது என்பது துணை மீதான உங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. ஒருவேளை நீங்களும் அவரிடம் எதையும் ஷேர் செய்யாமல், அவரும் உங்களிடம் எதுவும் கேட்காமல் நாளை கடத்தி கொண்டிருப்பது உங்கள் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த ஆர்வம் முற்றிலும் தற்போது இல்லை என்று அர்த்தம்.
 
உங்களுள் எழும் உணர்ச்சிகளை பற்றி நீங்களும் உங்கள் துணையும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு ஷேர் செய்து கொள்ளாமல் நீண்ட காலமாக இருந்து வருகிறீர்கள் என்றால், இருவரும் இனி உணர்ச்சிவசப்பட்ட பாலியல் வாழ்க்கையில் ஈடுபடமாட்டீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி தங்களது உணர்வுகளை ஷேர் செய்து கொள்ளாத எந்த திருமண பந்தமும் செழிப்பாக இருக்காது.
 
 திருமண பந்தத்தை செழிக்க செய்யும் மிக முக்கியமான ஒன்று எதிர்பார்ப்புகள். வலுவான தொடர்பு இன்றி தம்பதியர் ஒருவரிடமிருந்து ஒருவர் எதையும் எதிர்பார்க்க முடியாது. ஒருவேளை உங்கள் துணையிடமிருந்து நீங்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் வேண்டுமென்றே நிறுத்தி விட்டால் உங்கள் திருமண வாழ்வு சரியாக இருக்காது.
 
இருவருக்குமிடையே உணர்ச்சி ரீதியான தொடர்பு என்ற ஒன்று இல்லாவிட்டால், திருமண வாழ்வின் மீதான ஆர்வம் மற்றும் செக்ஸ் இரண்டுமே பின்னடைவை சந்திக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்