பெண்ணை ஆண் பார்க்கும் பார்வையின் நோக்கம்

29 பங்குனி 2018 வியாழன் 10:40 | பார்வைகள் : 11382
பெண்ணை ஒருவர் இயல்பாக பார்ப்பதற்கும், அழுத்தமாக நிலைகுத்தி பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அழுத்தமாக பார்ப்பது என்பது காட்சிக்கு அப்பால் உணர்ச்சிகளும் கலந்ததாக இருக்கும்.
அப்போது சில நேரங்களில் சினிமாக் காதல் பாடல் காட்சி போன்று அந்த பெண்ணோடு அவர் ‘டூயட்’ பாடும் கற் பனையில் மிதக்கலாம். பெண் ஒருவரை திரும்பத் திரும்ப பார்க்கும்போது அந்த பார்வை தடம்மாறி, உடலின் மற்ற பாகங்களை நோக்கியும் செல்லலாம். அது பாலியல் தூண்டலுக்கான பார்வையாகவும் மாறும். அத்தகைய பார்வைக்கு ‘வோயரிசம்’ (voyeurism) என்று பெயர்.
ஒரு பெண்ணை ஆண் பார்க்கும் பார்வையை வைத்து அது ஆரோக்கியமான பார்வையா? பிரச்சினைக்குரிய பார்வையா? என்று கண்டறிந்துவிடலாம். பாலியல் ஆபாச படங்களையும், அதுபோன்ற வீடியோக்களையும் அன்றாடம் பார்க்கும் வழக்கம் கொண்ட ஆண்களால் ஒரு வினாடிகூட பெண்களை நேருக்கு நேர் ஆரோக்கியமாக பார்க்க முடியாது.
அந்த பெண்ணின் உடலும், அது ஏற்படுத்தும் கிளர்ச்சியுமே அவரது சிந்தையை கவர்ந்துவிடுவதால், அவரது மனது முழுக்க பாலியல் சிந்தனையே துளிர்த்திருக்கும். அதனால் பெண்களை பற்றிய நல்ல எண்ணங்கள் இருந்தால்தான் அவர்களை நல்லவிதமாக ஆண்களால் பார்க்க முடியும்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1