Paristamil Navigation Paristamil advert login

தம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்

தம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்

24 ஐப்பசி 2019 வியாழன் 17:53 | பார்வைகள் : 13222


 திருமணம் என்ற பந்தத்தில் இணைந்த இரு உள்ளங்கள், தங்களுக்குள் எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும், அவற்றை ஒற்றுமையோடு எதிர்கொண்டு வாழ வேண்டும். அப்படி என்னதான் பிரச்சனைகளை சமாளித்து, வேற்றுமைகளை களைந்து, ஒற்றுமையோடு வாழ்ந்தாலும், வாழ்வின் சில இக்கட்டான சூழ்நிலைகள், அவ்வொற்றுமையை சோதித்துப் பார்க்கும் வகையில் விளங்குகின்றன. அச்சமயங்களில் இல்வாழ்க்கையை காத்து நிற்கும் தெய்வங்களாக விளங்கும் சில விஷயங்களை பற்றியே நாம், இந்த பதிப்பில் காணப்போகிறோம்.

 
1. திருமணம் என்னும் பந்தம் ஒவ்வொரு தம்பதியருக்கும் அளிக்கும் மிகப்பெரிய பரிசு, குழந்தைகள். திருமண வாழ்வில் வரும் சண்டைகளும் சர்ச்சைகளும், விலகி மகிழ்ச்சி நிலைக்க பேருதவி புரிவது குழந்தைகளே! தம்பதியருக்குள் எத்தகு பெரிய பிரச்சனைகள் தோன்றினாலும், அவற்றை குழந்தைகளுக்காக சரி செய்து, அச்சோதனையை வென்று, வாழ்வை சாதனையாக்கி வாழ்கின்றனர்; இந்த பலத்தை அவர்களுக்கு அளிப்பது, குழந்தைச் செல்வங்களே!
 
 
2. திருமணத்தால், ஏற்பட்ட புதிய உறவுகள், விரைவில் தம்பதியர் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன. அந்த உறவுகளைக் காப்பாற்றிக் கொள்ள, தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள முயல்கிறது, தம்பதியர் மனம்..
 
3. என்னதான் உறவுகளுக்காக என்று வாழ்க்கையை பிடித்தலோடு வாழ்ந்தாலும், சில சமயம் கசந்து போகும் திருமண வாழ்க்கையை பிரிய விடாமல் காப்பது பணமே! இது நிதர்சனமான உண்மையே! துணையை பிரிந்து வாழ்ந்தால், பணம் தேவை, பாதுகாப்பு தேவை, அன்பு, அக்கறை தேவை.., இந்த தேவைகளே! உறவை பிரியாமல் காக்கும் காவலர்களாக சில சமயங்களில் விளங்குகின்றன.
 
4. இத்தனை நாள் அனுபவித்த வசதியான வாழ்க்கை, மகிழ்ச்சியான வாழ்க்கையை இழக்க விரும்பாததும் உறவுகளை இணைத்து வைக்கும் விஷயங்களாக விளங்குகின்றன. குழந்தையின் சிரிப்பு, உறவுகளின் மகிழ்ச்சி கெடாது காக்கும் எண்ணமும் உறவுகளைக் காக்கிறது. கஷ்டத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாத மனமும் உறவை நீட்டிக்க உதவுகிறது.
 
5. தனிமையின் கொடுமையை உணர்ந்த மனம் உறவை உடைக்கத் துணியாது. தனிமையை பற்றிய பயமே, உறவினை உறுதிப்படுத்தும் விஷயமாக விளங்குகின்றன..

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்