Paristamil Navigation Paristamil advert login

மனைவியை வசப்படுத்தும் தந்திரங்கள்

மனைவியை வசப்படுத்தும்  தந்திரங்கள்

17 புரட்டாசி 2019 செவ்வாய் 17:09 | பார்வைகள் : 13764


 இன்றைய காலத்தில் கணவன் மனைவி உறவில் பல பிரச்சனைகளும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. வீட்டிற்கு போனாலே மனைவி சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் என ஆண்கள் கூறுவதை கேட்டிருப்போம். இங்கு மனைவியை வசப்படுத்தும் தந்திரங்களை அறியுங்கள்.

 
1. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது அலைபேசியில் அழைத்து, அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை கூறி வாங்கி வரவா என கேட்பது அவர்களை மகிழ்விக்கும்.
 
 
2. மனைவின் பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை ஞாபகத்தில் வைத்து கொண்டு பரிசுப் பொருள்களை வாங்கி கொடுத்து அசத்துவது.
 
3. புதிய ஆடைகளை அணிந்து வரும்போது வைத்த கண் வாங்காமல் பார்ப்பது. நீ இந்த ஆடையில் அழகாக இருக்கிறாய் என்று பாராட்டு தெரிவிக்கவேண்டும். எப்பவும் முகத்தை கோபமாக வைத்து கொள்ளாமல், அவ்வப்போது அல்லது மனைவியை பார்க்கும் போதாவது சிரித்து வையுங்கள்.
 
4. விடுமுறை நாட்களில் உங்களுக்கு தெரிந்த உணவு வகைகளை சமைத்து அசத்துங்கள். வீட்டில் ஆணி அடிப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளை கேட்டு முடித்து கொடுங்கள்.
 
5. சமையலறை சாமான்களை கவனித்து தீரும் நிலையில் உள்ள மளிகைப் பொருட்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.
 
6. வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு நாளாவது ஓட்டல், சினிமா, பார்க், பீச் என்று வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுங்கள்.
 
7. எப்பவுமே அம்மாவை தொந்தரவு செய்து வேலைவாங்கும் குழந்தைகளை ஒரு இரண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் வைத்து கொள்ளுங்கள்.
 
8. குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்த்தால் பெரிதாக தோன்றாது.
 
9. மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். கூர்ந்து கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து ‘இப்ப என்ன சொன்னே’ன்னு அசால்டா கேட்கக்கூடாது.
 
10. பூவுக்கு மயங்காத பெண்கள் இருக்க முடியாது. எனவே மனைவிக்கு பூவை வாங்கி கொடுத்து அசத்துங்க!
 
இவை உங்களுக்கு இடையேயான பிரச்சனைகளை குறைத்து நெருக்கத்தை அதிகரிக்கும். 
 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்