Paristamil Navigation Paristamil advert login

ஆண்கள் மனைவியை விட்டு விலகி போவதற்கான காரணங்கள்

ஆண்கள் மனைவியை விட்டு விலகி போவதற்கான காரணங்கள்

26 ஆவணி 2019 திங்கள் 06:22 | பார்வைகள் : 13039


 திருமணம் என்பது ஆண் (men) பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும், வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கையாக, பல தம்பதிகளிடையே உள்ளது.

 
ஏனெனில், இருவருக்கும் இடையே சரியான புரிதல் இல்லாததும், தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் தான், மனைவி இருக்கும் போதே பிற பெண்களிடம் ஆண்கள்(men) செல்வதற்க்கு காரணமாக உள்ளது. பெண்கள் தாம்பத்தியத்தில் சட்டென கோபப்படுவது, முகம் சுழிப்பது போன்ற விஷயங்கள் ஆண்களுக்கு உங்கள் மீதான் விருப்பத்தை குறைக்கும்.
 
 
திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை. ஆனால், நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டசெல்லுகிறது.
 
சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.
 
மனைவிகள் தங்களது விருப்பு வெறுப்புகளைப் பற்றி கணவருடன் மனம் திறந்து பேச வேண்டும். அவ்வாறு, உங்களின் வெளிப்படையான கருத்து, உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.
 
அப்பொழுதுதான், முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்லாமல், ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம்.
 
குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. பல பேர் அப்படி இல்லை என்றாலும், பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
 
ஆண்கள்(men) எப்பொழுதும், தங்களது துணை தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள்.
 
அவ்வாறு இல்லது போனால், அவர்களுக்கு தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே, இன்னொரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது.
 
இது காலப் போக்கில், மற்றொரு பெண் மீது காதலாக மாறிவிடுகிறது. குழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால், கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள்.
 
இது, அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குகிறது. இதுவும் கூட பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாக இருக்கிறது.
 
இதற்காக எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்லவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவர்களை மாற்றுவதற்கு இது சில காரணம் தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். மனைவியிடமிருந்து போதிய அன்பு கிடைக்காமல் இருக்கலாம். அல்லது சில ஆண்கள்(men) இயற்கையாகவே பெண்கள் மீதான சபல புத்தியுடன் இருப்பார்கள். அவர்களை வயது தளர்ந்தவுடன் காலம் தான் மாற்றும்.
 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்