நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா?
13 கார்த்திகை 2018 செவ்வாய் 10:36 | பார்வைகள் : 8658
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். அப்படி ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிப் பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். அப்படியே தேடிப் பிடித்தாலும் திருமணத்துக்கு முன்பு இருந்தது போலவே தான் திருமணத்துக்குப் பின்னும் இருப்பார்களா என்று தெரியாது. இப்படி வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன.
இதுபோன்ற அநாவசியமான பிரச்னைகளைத் தவிர்க்க சிறந்த வழி நெருங்கிய நண்பரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்வது தான்.
நெருங்கிய நண்பரை விட சிறந்த வாழ்க்கைத் துணை வேறு எதுவும் இருக்காது. அதனால் நெருங்கிய நண்பரைத் திருமணம் செய்துகொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
இருவருக்குமே உள்ள கெட்ட பழக்கங்கள், குறைகள் ஆகியவை இருவருக்குமே தெரியுமென்பதால் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட முடியும்.
இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருப்பதால் அளவுக்கதிகமான நம்பிக்கையும் உண்டாகும்.
ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.
ஒருவரையொருவர் குறை சொல்லமாட்டார்கள்.
இருவருக்குமிடையே அதிகபட்ச நேர்மை இருக்கும்.
ஒருவருக்கொருவர் பழகுவதில் அதிக இணக்கமும் நெருக்கமும் இருக்கும். புதிய ஆளிடம் பழகுகிறோம் என்ற சங்கடம் இருக்காது.
கடினமான, பிரச்னைக்குரிய சமயங்களில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பார்கள்.
இருவரில் யாருக்கு பிரச்னை என்றாலும் முதல் ஆளாக ஓடிவந்து தன்னுடைய பிரச்னையாக நினைத்து தீர்த்து வைப்பார்கள்.
அதனால் வெளியில் தேடி அலைவதைக் காட்டிலும் நெருங்கிய நண்பரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.