உணவுகளை பச்சையாக சாப்பிடலாமா?
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9465
நோயற்ற வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவுகளும், சீரான உடற்பயிற்சியும் அவசியம். நாம் உண்ணும் உணவுகளில் சிலவற்றை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவதன் மூலம் முழுமையான சத்துக்களை பெறலாம். குறிப்பாக மதிய உணவில் காய்கறி மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
இரவு உணவு மற்றும் குளிர் காலங்களில் உணவுகளை பச்சையாக சாப்பிடும் போது செரிமான பிரச்னைகள் ஏற்படலாம், எனவே ஜூஸாக பருகுவது சிறந்த முறை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டும் பழங்களை கடித்து உண்பது தான் நல்லது. உடலில் உள்ள நச்சுக்களை போக்க, ஆப்பிள், பப்பாளி, பெர்ரி, அன்னாசி, பேரிக்காய், துளசி போன்ற உணவுகளை பச்சையாக அல்லது ஜூஸாக அப்படியே சாப்பிடலாம்.
அதுமட்டுமின்றி காய்கறிகளை மிதமான சூட்டில் வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது. மேலும் காய்கறிகளை சமைக்கும் போது மஞ்சள், சீரகம் மற்றும் மிளகு சேர்த்து சமைத்தால் நலம், இதனால் உடலுக்கு தேவையான வலிமை கிடைக்கிறது.